கேரளாவில் 'BevQ' ஆப் மூலம் மதுபான விற்பனை தொடங்கியது.. குடிமகன்களுக்கு வைக்கப்பட்ட செக்
கேரளாவில் 'BevQ' ஆப் மூலம் மதுபான விற்பனை தொடங்கியது.. குடிமகன்களுக்கு வைக்கப்பட்ட செக்
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் BevQ ஆப் மூலம் VQM என்ற சிஸ்டம் முறையில் 67 நாட்களுக்கு பின் மதுபானங்கள் விற்பனை இன்று தொடங்கி உள்ளது.
BevQ ஆப் மூலம் VQM என்ற சிஸ்டம் முறையில் (virtual queue management system) பதிவு செய்து இ-டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படுகிறது.
இந்த செயலி மூலம் ஒருமுறை மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்யும் வகையில் BevQ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.
தேசபக்தியே இல்லாதவர் அனுஷ்கா.. விராட் கோலி டைவர்ஸ் செய்ய வேண்டும்.. பாஜக எம்எல்ஏ பகீர் பேச்சு

BevQ ஆப்
இது ஒருபுறம் எனில் கேரளாவில் ஆன்லைனில் மது வாங்க BevQ, என்ற ஆப்பை பிளே ஸ்டோரில் நேரலைக்கு செல்ல கூகுள் அனுமதி அளித்துள்ளது. இதை கேரள மாநில பீவரேஸ் கார்ப்பரேஷன் (பெவ்கோ) வழங்கியுள்ளது. பெவ்கோ என்பது வேறு ஒன்றுமல்ல நம்மூரில் உள்ள டாஸ்மாக்கை போல் அங்குள்ள அரசின் நிறுவனம். இதுதான் மதுபானங்களை விற்பனை செய்ய உள்ளது.,

கூட்ட நெரிசலை தடுக்க
அரசின் பெவ்கோ நிறுவனத்துக்கு கொச்சியை தளமாகக் கொண்ட ஃபேர்கோடு டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் எனப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனம் BevQ ஆப்பை உருவாக்கியுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் மதுபானக் கடைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கேரள அரசு உருவாக்கி உள்ளது. BevQ பயன்பாட்டின் 'ஆரம்ப அணுகல்' பதிப்பு நேற்று காலை வரை நேரலையில் இருந்தது, இருப்பினும், இது Google Play Store இல் இப்போதைக்கு கிடைக்காது. பாதுகாப்பு அம்சங்கள் ஆய்வுக்கு பின்னர் கொண்டுவரப்பட உள்ளது.

வீட்டின் அருகில் வாங்கலாம்
கேரளாவில் மதுபான விற்பனைக்கு ஈ-டோக்கன்களை உருவாக்க பெவ்க்யூ முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. இன்று 9வியாழக்கிழமை) முதல் கேரளாவில் மது விற்பனை தொடங்கியுள்ளது. தொற்றுநோய்களுக்கு மத்தியில் மதுபானக் கடைகளுக்கு வெளியே கூட்டத்தை நிர்வகிக்க டெல்லி அரசு அறிமுகப்படுத்திய இ-டோக்கன் முறையைப் போலவே, பெவ்க்யூ, தனது வாடிக்கையாளர்களை ஜி.பி.எஸ் இருப்பிடத்தின் அடிப்படையில் அருகிலுள்ள விற்பனை நிலையங்களுக்கு வாடிக்கையாளர்களை அனுமதிக்கிறது.

தவிக்கும் குடிமகன்கள்
இந்த ஆப்பை பயன்படுத்தி ஒரே நேரத்தில் 35 லட்சம் பேர் முன்பதிவு செய்ய முடியும் என்கிறார்கள். இந்த ஆப் மூலம் காலை 9மணி முதல் மாலை 5 மணி வரை மதுபானங்கள் வாங்க முடியும். இப்போதைக்கு ஆப் பிளே ஸ்டோரில் இல்லை. விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே டவுன்லோடு செய்வதற்கான வழிகள் தெரியாததால் குடிமகன்கள் கேரளாவில் தவித்து போய் உள்ளனர்.