திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மருத்துவக் கண்காணிப்பை ஏமாற்றும் கேரளா மக்கள்.. கொரோனா உக்கிரமாக பரவும் அபாயம்.. அமைச்சர் கவலை

Google Oneindia Tamil News

Recommended Video

    கேரளாவில் 3வது நபருக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் | Coronavirus attack in Kerala

    திருவனந்தபுரம்: கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் கேரளாவில் சுகாதாரத் துறை கண்காணிப்பை ஏமாற்றுகிறார்கள். இதனால் வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    சீனாவில் வுகான் மாகாணத்தில் ஒரு மீன் சந்தையிலிருந்து கொரோனா வைரஸ் என்ற வைரஸ் நோய் கடந்த டிசம்பர் மாதம் முதல் அந்நாட்டு மக்களை பாடாய்படுத்தி வருகிறது.

    காய்ச்சல், சளி, இருமல், மூச்சுப் பிரச்சினையுடன் தொடங்கும் இது இறுதியில் உறுப்புகளைச் செயலிழக்க வைத்து உயிர் பலியை ஏற்படுத்துகிறது. இந்த நிலையில் அந்த நோய் இந்தியா, ஜப்பான், தாய்லாந்து உள்ளிட்ட 25 நாடுகளில் பரவியுள்ளது.

    அயோத்தியில் ராமர் கோவில்.. அமைத்தாச்சு அறக்கட்டளை... நாடாளுமன்றத்தில் மோடி அதிரடி அறிவிப்புஅயோத்தியில் ராமர் கோவில்.. அமைத்தாச்சு அறக்கட்டளை... நாடாளுமன்றத்தில் மோடி அதிரடி அறிவிப்பு

    மருந்து

    மருந்து

    இந்த நோய்க்கு மருந்து ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் நோய் தீவிரம் அடைந்தால் உயிர் பலி ஏற்படுவது அபாயம் என்பதால் இந்த வைரஸ் நோயை உயிர் கொல்லி என்றும் கூறுகின்றனர். இந்த நோய்க்கு இதுவரை மருந்து ஏதும் கண்டுபிடிக்காததால் உலக நாடுகள் பீதியடைந்துள்ளன. இதுவரை சீனாவில் கொரோனா வைரஸுக்கு 450-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

    கொரோனா வைரஸ்

    கொரோனா வைரஸ்

    இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இந்த நிலையில் சீனாவிலிருந்து கேரளாவுக்கு வந்த 140 பேரில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 46 பேருக்கு பாதிப்பு இல்லாத நிலையில் மற்ற 91 பேரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவுகளுக்காக கேரளா அரசு காத்திருக்கிறது.

    84 பேர்

    84 பேர்

    இதனால் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் கே கே ஷைலஜா அச்சம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஷைலஜா கூறுகையில் சீனாவிலிருந்து திரும்பிய 2,239 பேர் கண்காணிப்பில் இருக்கின்றனர். 84 பேர் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில் வைக்கப்பட்டுள்ளனர்.

    உயிர் கொல்லி

    உயிர் கொல்லி

    மிகுந்த எச்சரிக்கையோடு இருந்த போதிலும், சீனாவில் இருந்து திரும்பிய சிலர் சுகாதாரத் துறையினரை ஏமாற்றுகின்றனர். இது மிகவும் ஆபத்தானது. மேலும் ஒரு உயிர் கொல்லி நோயை மற்றவர்களுக்கு பரப்புவது குற்றமாக கருதப்படுகிறது. எனவே சீனாவிலிருந்து வரும் பயணிகள் கட்டாயம் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    English summary
    Some of the Keralites has skipped Medical testing when they reached from China. This one is a big offence.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X