திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.. நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலி.. இன்று மிக அதிக கனமழை!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நிலச்சரிவில் சிக்கி 9 பேர் பலியாகிவிட்டனர். இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

Recommended Video

    கேரளாவை உலுக்கி எடுக்கும் பேய் மழை…. 8 பேர் பலி.. 22 பேர் மண்ணில் புதைந்த சோகம்

    அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் கேரளாவில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை கொட்டி வருகிறது. இதனால் கேரளாவில் பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், இடுக்கி, திரிச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் மிக அதிகமான கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் இல்லை தமிழகத்தில் இன்றைய தினம் கொரோனா தடுப்பூசி மெகா முகாம் இல்லை

    அது போல் திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதிகளில் பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

    மலை பாங்கான பகுதிகள்

    மலை பாங்கான பகுதிகள்

    கேட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா ஆகிய மாவட்டங்களில் உள்ள மலை பாங்கான பகுதிகளில் மீனாச்சல் மற்றும் மணிமாலா ஆகிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், தற்போதைய நிலை மிகவும் மோசமாக உள்ளது. அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    கனமழை

    கனமழை

    அடுத்த 24 மணி நேரத்திற்கு மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தெற்கு மற்றும் மத்திய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் வடக்கு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தில் உள்ள பல்வேறு நீர் நிலைகள் வழிந்தோடுவதால் அவை எப்போது வேண்டுமானாலும் திறந்து விடலாம். நீர் பிடிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்கள் அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுங்கள் என்றார்.

    நாளை மறுநாள் குறையும்

    நாளை மறுநாள் குறையும்

    இன்று காலை முதல் கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழைக்கு பெய்யும். நாளை மறுநாள் அக்டோபர் 19ஆம் தேதி மழை படிப்படியாக குறையும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. சுற்றுலா தலங்களுக்கும் நீர் நிலைகள் இருக்கும் பகுதிகளுக்கு செல்வதையும் மக்கள் தவிர்க்குமாறு மாவட்ட அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    கொல்லம்

    கொல்லம்

    கொல்லம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கால் பல்வேறு சாலைகள் அடித்துச் செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. குட்டநாடு பதுகிளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கோட்டயம் மாவட்டத்தில் கனமழையால் முண்டகாயம் பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப் பாதிப்பு பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இடுக்கியில் உள்ள தோடுபுழா, கோக்கயூர், கோட்டயம் மாவட்டத்தில் கோட்டிக்கல்லில் ஏற்பட்ட நிலச் சரிவில் சிக்கி 9 பேர் பலியாகிவிட்டனர். 15 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணிகள் நடைபெறுகின்றன.

    English summary
    As Heavy rain lashes in Kerala,IMD warns red alert for 5 districts.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X