• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

பாம்பை ஏவி மனைவி கொலை.. கொடூர கணவர் சிக்கியது எப்படி.. அதிர வைக்கும் தகவல்கள்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் உத்ரா கொலை வழக்கில் பாம்பை ஏவி கணவர் சூரஜ்தான் குற்றவாளி என்பது உறுதியானது எப்படி என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

கேரளாவில் பாம்பை ஏவி மனைவி உத்ராவை கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி கொன்ற வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி கொல்லம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் ரூ 5 லட்சம் அபராதத்தையும் விதித்தது.

இது போன்ற வழக்கில் குற்றம் எப்படி நிரூபிக்கப்பட்டது என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக இது போன்ற வழக்குகளில் குற்றவாளிகள் எளிதில் தப்பிவிடுவர். ஆனால் இந்த வழக்கை பொருத்தமட்டில் சூரஜ்தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க கொல்லம் போலீஸார் மிகவும் சிரத்தை எடுத்தனர்.

பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொலை செய்த கொடூர கணவருக்கு அதிரடி தண்டனையை வழங்கியது கேரள நீதிமன்றம்!! பாம்பை கடிக்கவிட்டு மனைவியை கொலை செய்த கொடூர கணவருக்கு அதிரடி தண்டனையை வழங்கியது கேரள நீதிமன்றம்!!

எஸ்பி தகவல்

எஸ்பி தகவல்

இதுகுறித்து கொல்லம் காவல் துறை எம்பி ஹரிசங்கர் மலையாள நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் கூறுகையில் உத்ரா இரண்டு முறை விஷப்பாம்பினால் கடிப்பட்டதாக எங்களுக்கு அவரது பெற்றோர் தெரிவித்தனர். இது வித்தியாசமாகவும் இயற்கைக்கு மாறாகவும் இருந்தது. பிரேத பரிசோதனையிலும் எங்களுக்கு எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை.

சர்ப்ப பூஜை

சர்ப்ப பூஜை

அப்போதுதான் சூரஜ் சர்ப்ப பூஜை செய்ததாக ஒரு தகவல் கிடைத்தது. உத்ரா இறந்து ஒரு வாரத்தில் அவரது தந்தை தனது மகள் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் அளித்தார். சூரஜும் தனது மகளிடம் வெறித்தனமானவே பல நேரங்களில் நடந்து கொள்வார் என்றும் அவர் தெரிவித்தார். இதை வைத்து விசாரணையை முடுக்கினோம். சூரஜ் வீட்டில் உத்ரா இருந்த போது கட்டு வீரியன் பாம்பு கடித்ததாம். அப்போது அவர் பிழைத்து கொண்டார்.

நாகப்பாம்பு

நாகப்பாம்பு

ஆனால் உத்ரா தனது தாய் வீட்டில் இருந்த போதுதான் நாகப்பாம்பு கடித்தது. இதில் அவர் இறந்து விட்டார். இரு பாம்புகளின் குணாதிசயங்களையும் நாங்கள் ஆய்வு செய்து பார்த்தோம். நிறைய பாம்பாட்டிகளிடமும் விசாரணை நடத்தினோம். பாம்பை பற்றி நன்கு தெரிந்தவர்களிடம் பேசினோம். சூரஜ் வீட்டில் உத்ரா இருந்த போது கட்டுவீரியன் பாம்பு கடித்த போது அவர் முதல் மாடியில் இருந்தார்.

தரை பகுதி

தரை பகுதி

பொதுவாக இந்த வகை பாம்புகள் தரைப்பகுதியிலும் விவசாய நிலங்களிலும் மட்டுமே காணப்படும். சுவர் ஏறும் பழக்கம் இல்லாதவை. மரங்களில் கூட இவை ஏறாதவை. மிக அரிதாகவே மரங்களில் காணப்படும். இதுகுறித்து சூரஜின் தாயிடம் கேட்ட போது முதல் மாடியில் உள்ள அறையில் ஜன்னலில் மரக்கிளை வழியாக வந்திருக்கலாம் என்றார். மேலும் அந்த கிளையை வெட்டுமாறு எத்தனையோ முறை சூரஜிடம் சொல்லியும் அவர் கேட்கவில்லை என்றார்.

மரக்கிளை

மரக்கிளை

மேலும் அக்கம்பக்கத்தில் விசாரித்ததில் அந்த மரக்கிளை தற்போதுதான் அவர்கள் வீட்டின் மீது சாய்ந்துள்ளது. அதனை ஜன்னல் அருகே அவர்கள்தான் இழுத்து வைத்துள்ளனர் என்பது போல் குற்றம்சாட்டினர். இந்த இரு வேறு வாக்குமூலங்களும் எங்களுக்கு மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தின. இதையடுத்து இரண்டாவதாக நாகப்பாம்பு கடித்த விஷயத்தை ஆய்வு செய்தோம். 2ஆவது மாடியில் படுத்திருந்த உத்ரா அறையில் இரு ஜன்னல்கள் இருந்தன. இரண்டுமே 4 அடி உயரத்திற்கு இருந்தன.

நாகப்பாம்புகள் எத்தனை நீளம்

நாகப்பாம்புகள் எத்தனை நீளம்

இந்த நாகப்பாம்பு 15 மீட்டர் நீளத்தில் இருந்தது. பொதுவாக நாகப்பாம்புகள் தன்னுடைய நீளத்தில் இருந்து மூன்றில் ஒரு பங்கு மட்டுமே உயரம் எழும் தன்மை கொண்டது. அவ்வாறெனில் ருத்ராவை கடித்த பாம்பு 5 மீட்டர் உயரம் வரையே எழ முடியும். பொதுவாக நாகப்பாம்புகளை சீண்டாமல் அவை யாரையும் தாக்காது. அடிக்கடி விஷத்தை கக்கி தாக்கினால் அதன் உடலில் இருந்து விஷ சுரப்பிகள் தீர்ந்து விடும். பின்னர் விஷம் உருவாக நேரம் எடுக்கும். அது வரை தன்னை தற்காத்து கொள்ள பாம்பு விஷம் இல்லாமல் இருக்கும் நிலை ஏற்படும். இதனால் தனது ஆயுதத்தை மிகவும் சிக்கனமாகவே அது பயன்படும்.

பாம்பு கடிக்குமா

பாம்பு கடிக்குமா

சும்மாவே ஜன்னல் வழியாக ஏறிவிட்டோம் என்பதற்காகவெல்லாம் இந்த பாம்புகள் கடிக்காது. நாகப்பாம்புகள் முதலில் எதிராளியை பயமுறுத்துவே பார்க்கும். முதலில் சீறும், பின்னர் லேசான விஷத்தை கக்கும், பின்னர் முழு விஷத்தை கக்கும். எனவே உத்ராவை பாம்பு இயற்கையாக கடிக்கவில்லை. யாரோ பாம்பை கடிக்க வைத்துள்ளனர் என்பது நன்றாக தெரியவந்தது. மேலும் சூரஜுக்கு வனவிலங்குகள் என்றால் மிகவும் ஆர்வமாம். கடந்த ஆண்டு தொடக்கத்தில் கூட சூரஜ் ஒரு பாம்பை பிடித்து வந்து எல்லோருக்கும் காட்டியுள்ளார். இதையடுத்து சூரஜுக்கு அந்த பாம்பை கொடுத்த பாம்பாட்டியை விசாரித்தோம்.

கூகுளில் தேடிய சூரஜ்

கூகுளில் தேடிய சூரஜ்

மேலும் வீரியன் பாம்புகள் குறித்து கூகுளில் அதிகமாக தேடியுள்ளார் சூரஜ். அதே வேளையில் உத்ராவை பாம்பு கடித்தவுடன் அதுகுறித்த தேடலை நிறுத்திவிட்டு நாகப்பாம்பு குறித்து தேடியுள்ளார். இப்படியாக அவர் இரு பாம்புகள் குறித்து மட்டுமே கூகுளில் தேடியுள்ளார். இந்த சூழல்களை எல்லாம் சேர்த்து இந்த வழக்கில் சூரஜ்தான் குற்றவாளி என்பதை நிரூபித்தோம் என்றார்.

English summary
How Kerala police proved Suraj was involved in this murder?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X