திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செம ஷாக்.. கேரளாவில் வெறும் 10 நாட்களில்.. 1000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கடந்த 10 நாட்களில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர்களே மறுக்கும்போது.. கொரோனா சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்யும்.. தப்லீக் ஜமாத் தன்னார்வலர்கள்உறவினர்களே மறுக்கும்போது.. கொரோனா சடலங்களுக்கு இறுதி சடங்கு செய்யும்.. தப்லீக் ஜமாத் தன்னார்வலர்கள்

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆம் அலை காரணமாக வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது. இதைத் தடுக்கு மத்திய மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை எடுத்து வரும்போதும், பெரியளவில் பலனளிக்கவில்லை.

கொரோனா 2ஆம் அலையில் முன்களப் பணியாளர்களுக்கும் சுகாதார ஊழியர்களும் கொரோனா கண்டறியப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் மதுரையில் 8 மாத கர்ப்பிணி மருத்துவர் சண்முகப்பிரியா உயிரிழந்தது தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா

சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா

கேரளாவில் சுகாதார ஊழியர்கள் கொரரோனாவால் பாதிக்கப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கடந்த 10 நாட்களில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கேரள அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் டி என் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பினராயி விஜயன் கடிதம்

பினராயி விஜயன் கடிதம்

இந்நிலையில், வரும் காலங்களில் கொரோனா பாதிப்பு மாநிலத்தில் அதிகரிக்கும் என்பதால் மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்ப முடியாது எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "தற்போது கேரளாவிலிருந்து தினசரி 40 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தமிழகத்திற்கு அனுப்பப்படுகிறது.

கொரோனா நோயாளிகள்

கொரோனா நோயாளிகள்

ஆனால், கேரளாவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் தற்போது 4 லட்சம் கொரோனா நோயாளிகள் உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் மே 15ஆம் தேதி ஆறு லட்சமாக உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. அப்போது கேரளாவுக்கு தினசரி 450 டன் ஆக்சிஜன் தேவைப்படும்.

ஆக்சிஜன் அனுப்ப முடியாது

ஆக்சிஜன் அனுப்ப முடியாது

மாநிலத்தில் பல்வேறு இடங்களையும் சேர்த்து மொத்தம் 219 டன் ஆக்சிஜன் தினசரி உற்பத்தி செய்யப்படுகிறது. கேரளாவில் கொரோனா 2ஆம் அலை கருத்தில் கொண்டு முன்னதாகவே 450 டன் ஆக்சிஜன் கையிருப்பில் வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அண்டை மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை ஏற்பட்டதால் கையிருப்பிலிருந்து ஆக்சிஜன் அனுப்பி வைக்கப்பட்டன. தற்போது கேரளாவில் கையிருப்பில் 86 டன் மட்டுமே உள்ளது. எனவே மற்ற மாநிலங்களுக்கு ஆக்சிஜனை அனுப்ப இயலாது. மேலும், கேரளாவில் உற்பத்தி செய்யப்படும் 219 டன் ஆக்சிஜன் முழுவதையும் கேரளாவே பயன்படுத்திக்கொள்ள அனுமதிக்க வேண்டும்" என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
Pinarayi Vijayan latest letter to PM Modi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X