திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

காப்பாத்துங்க.. காப்பாத்துங்க.. கடலில் குதித்த ராகுல்.. தபதபவென நீந்தி.. உயிரை காத்த தீரம்!

கேரள கடலில் தத்தளித்த இளைஞரை கடற்படை அதிகாரி ஒருவர் காப்பாற்றி உள்ளார்,.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: "காப்பாத்துங்க.. காப்பாத்துங்க" என்ற அலறல் சத்தம் பீச்சை சுற்றி சுற்றி கேட்டு கொண்டே இருந்தது! இதன் பின்னர்தான் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்தது!

கேரள மாநிலம் வைபின் கடற்கரையில் ராகுல் தலால் என்ற கடற்படை அதிகாரி மனைவியுடன் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போதுதான் அபாய குரல் கேட்டது!

In Kerala, Naval officer rescues man from drowning

உடனே சுற்றிமுற்றிலும் பார்த்த ராகுல், சத்தம் எங்கிருந்து வருகிறது என்று தேடிக் கொண்டே ஓடினார். அப்போது திலீப் குமார் என்ற இளைஞர் நடுக்கடலில் உயிருக்காக போராடி கொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

கருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டுகருணாநிதிக்கு சிகிச்சை அளிக்காமல் வீட்டுச் சிறை வைத்தவர் ஸ்டாலின்- முதல்வர் பரபர குற்றச்சாட்டு

அங்கு நிறைய பேர் இருந்தாலும், திலீப்பை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. ஓடிச்சென்ற ராகுல், வேகமாக தண்ணீரில் குதித்தார். கடகடவென நீந்தி சென்று திலீப்பை இழுத்து கொண்டு வந்து கரையில் சேர்த்தார்.

ஆனால் கரைக்கு வந்ததும் திலீப்பினால் மூச்சுவிட முடியவில்லை. பிறகுதான் தெரிந்தது, மூக்கிற்குள் தாவரங்கள் சில சிக்கி கொண்டிருந்தன. உடனடியாக ராகுல் அந்த தாவரங்களையெல்லாம் மெதுவாக வெளியில் எடுத்தார். தொடர்ந்து முதலுவியும் செய்தார். அப்போதுதான் திலீப்புக்கு மூச்சே வந்தது.

இந்திய கடற்படை தனது பேஸ்புக் பதிவில் இந்த தகவலை பதிவிட்டதுதான் தாமதம்.. தொடர்ச்சியான பாராட்டுக்கள் ராகுலுக்கு குவிய ஆரம்பித்துள்ளன!

English summary
An Indian Navy officer is being hailed as a hero after he saved a youth from drowning at Kerala Beach
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X