திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடுக்கி உள்பட 6 மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்.. கண்முன் நிழலாடும் 2018 வெள்ளம்.. கலக்கத்தில் கேரளம்

Google Oneindia Tamil News

Recommended Video

    3 நாள் செம மழை இருக்கு... வானிலை அறிவிப்பால் மகிழ்ச்சியில் தமிழகம்...

    திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில் ஜூலை 18, 19, 20 ஆகிய தேதிகளில் குறிப்பிட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதாலும் மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்க வேண்டியும் இந்திய வானிலை மையம் முறையே சிவப்பு மற்றும் ஆரஞ்ச் அலர்ட் விடுத்துள்ளது.

    இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பேஸ்புக் பக்கத்தில் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறுகையில் இடுக்கி, மலப்புரம், வயநாடு, கண்ணனூர், எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    ஆஹா.. சென்னையில் என்ன ஒரு அருமையான கிளைமேட்.. பரவலான மழையால் நெகிழும் மக்கள்!ஆஹா.. சென்னையில் என்ன ஒரு அருமையான கிளைமேட்.. பரவலான மழையால் நெகிழும் மக்கள்!

    தொடர் மழை

    தொடர் மழை

    இங்கு 3 நாட்களுக்கு மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. தொடர்ச்சியாக மழை பெய்து வந்தால் இயற்கை பேரிடர்களான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஆகியன நடைபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

    கனமழை

    கனமழை

    கனமழையை கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஜூலை 17- ஆம் தேதி இடுக்கி, 18-ஆம் தேதி கோட்டயம், 19-ஆம் தேதி எர்ணாகுளம், பாலக்காடு, 20-ஆம் தேதி பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணனூர் ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மஞ்சள் அலர்ட்

    மஞ்சள் அலர்ட்

    ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 115 மி.மீ. முதல் 204.5 மி.மீ வரை மழை பெய்யும். அது போல் ஜூலை 17-ஆம் தேதி கோட்டயம், எர்ணாகுளம், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணனூர், ஜூலை 18-ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, வயநாடு, கண்ணனூர், காசர்கோடு, ஜூலை 19-ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், திருச்சூர், கோழிக்கோடு, காசர்கோடு, ஜூலை 20-ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    மக்கள் அச்சம்

    மக்கள் அச்சம்

    எனவே அனைவரும் வானிலை அறிவிப்புகளின் எச்சரிக்கைகளை பின்பற்றுமாறு பினராயி விஜயன் கேட்டுக் கொண்டுள்ளார். கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையின்போது கனமழையால் மாநிலமே சின்னாபின்னமான நிலையில் தற்போது இந்திய வானிலை மையத்தின் எச்சரிக்கையால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

    English summary
    Indian Meteorological Centre issues red alert for 6 districts in Kerala. Pinarayi Vijayan asks Public should be cautious in the situation of rain.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X