திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் ரணகளம்... மாணவனுக்கு கத்தி குத்து... போராடியவர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் கல்லூரி மாணவர் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள் மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினைச் சேர்ந்தவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வருகிறது கேரள பல்கலைக்கழகம். இங்கு பி.ஏ. அரசியல் அறிவியல் 3ம் ஆண்டு படித்து வரும் மாணவர் அகில் சந்திரன். இவர் பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து தாக்கப்பட்டு, கத்தியால் குத்தப்பட்டார். வேறு 3 மாணவர்களும் காயமடைந்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஆளும் அரசுக்கு எதிராக பேசியதாக, இந்திய மாணவர்கள் கூட்டமைப்பு (எஸ்.எப்.ஐ.) உறுப்பினர்களுக்கும் மற்றும் பிற மாணவர்களுக்கும் இடையே மோதல் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ் மாட்டுக்கறி சாப்பிடலாம் வாங்க.. பேஸ்புக்கில் அழைப்பு.. இளைஞரைக் கைது செய்த போலீஸ்

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து, பல்கலைக்கழக துணை வேந்தருக்கு எதிராக மாணவ, மாணவிகள் ஒன்றாக திரண்டு கோஷங்களை எழுப்பியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், கே.எஸ்.யூ., எம்.எஸ்.எப்., ஏ.பி.வி.பி. போன்ற அமைப்புகளின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதன்பின் அடையாளம் தெரியாத 20 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

நீதி வேண்டும்

நீதி வேண்டும்

இந்தநிலையில், நீதி வேண்டும் என்று கூறி, தலைமைச் செயலகத்தின் முன்பு (கே.எஸ்.யூ.) கேரளா மாணவர்கள் யூனியனைச் சேர்ந்த மாணவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், திடீரென தலைமைச் செயலக வளாகத்திற்குள் சுவர் ஏறி குதித்தனர். அவர்களை சுற்றிவளைத்த போலீசார், வழக்கு பதிவு ஏதுவும் செய்யாமல், திருப்பி அனுப்பி வைத்தனர்.

தலைமைச் செயலகம் முற்றுகை

தலைமைச் செயலகம் முற்றுகை

இதற்கிடையில், பல்கலைக்கழக கல்லூரியில் மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து, மாணவர்களுக்கு ஆதரவாக பேரணியாக வந்த, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) தொண்டர்கள் தலைமைச் செயலகம் முன்பாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கண்ணீர் புகை குண்டு வீச்சு

அமைச்சரவை கூட்டம் தலைமைச் செயகத்திற்குள் நடந்து வந்த சூழ்நிலையில, போராட்டக்காரர்களை கலைக்க, போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்தும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதனால், அப்பகுதி போர்க்களம் போல் காட்சியளித்தது.

English summary
Indian Union Muslim League (IUML) workers held protest outside Kerala Secretariat in Thiruvananthapuram, today over the incident in which a student was stabbed at the University College, on Friday. Police used water canons & tear gas to disperse the protesters.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X