திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கடும் எதிர்ப்பால் திருப்பம்.. ரயில்வே மெனுவில் மீண்டும் கேரள உணவுகள்.. கிடைத்தது கூடுதல் போனஸ்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்:பழம்பொரி மற்றும் இலை அட போன்ற பிரபலமான கேரள உணவுகள் கடந்த மாதம் ரயில்வே மெனுவிலிருந்து காணாமல் போனது. அதற்கு பதிலாக சமோசா மற்றும் கச்சோரி போன்ற வட இந்திய சிற்றுண்டிகள் இடம்பெற்றது. இதற்கு தென் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து மீண்டும் கேரளாவின் பாரம்பரிய உணவுகள் ரயில்வே மெனுவில் இடம் பெற்றுள்ளது. அத்துடன் போனஸாக அந்த மெனுவில் கேரளாவின் ஸ்பெஷலான மீன் குழம்பு சாப்பாடு இடம் பெற்றுள்ளது. இதை பார்த்து கேரளாவைச் சேர்ந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கேரளாவின் பாரம்பரிய காலை சிற்றுண்டி உணவுகளான வாழைப்பழ வறுவல் (பழம்பொறி), இலை அட, கொழுக்கட்டை, உன்னியப்பம், நெய்யப்பம், மோடக்கம் / சுகியன் உள்ளிட்ட உணவுகள் திடீரென ரயில்வே உணவு மெனு கார்டு பட்டியலில் இருந்து நீக்கிவிட்டது.

கடும் எதிர்ப்பு

கடும் எதிர்ப்பு

இதை கண்டு கொதித்து போன மலையாளிகள் மற்றும் தென்னிந்தியர்கள் பலர்,மீண்டும் ரயில்வே மெனுவில் கேரளாவின் பாரம்பரிய உணவுகள் இடம் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

கலாச்சார பாசிசம்

கலாச்சார பாசிசம்

பழம்பொரியை நீங்கள் எவ்வாறு அகற்ற முடியும், இது ரயில் பயணத்தில் எனது பிரதானமாக இருந்தது 'என்று ஒரு அதிருப்தி அடைந்த பயனாளி ஒருவர் ரயில்வே நிர்வாகத்துக்கு புகார் எழுதினார். மற்றொருவர் இது ' கலாச்சார பாசிசிம் 'என்று கடுமையாக விமர்சித்தார்.

ரயில்வே அமைச்சருக்கு

ரயில்வே அமைச்சருக்கு

கேரளாவின் சுவையான உணவுகளை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி எர்ணாகுளம் லோக்சபா எம்பி ஹிபி ஈடன் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதினார்.

முக்கிய உணவுகள்

முக்கிய உணவுகள்

அவர் எழுதிய கடிதத்தில் 'காலை உணவுக்கு மலையாளிகளுக்கு மிகவும் முக்கியமான சில உணவுகள், ஆப்பம், முட்டை கறி, பரோட்டா, தோசை, சப்பாத்தி, புட்டு. இதில் வாழைப்பழ வறுவல் (பழம்பொரி), இலை அட, கொழுகட்டை, உன்னியப்பம் போன்ற சிற்றுண்டிகளுடன் விலக்கப்பட்டன. நெய்யப்பம், modakkam / sukhiyan போன்றவை விலக்கப்பட்டுள்ளன, என ஈடன் தனது கடிதத்தில் கூறினார்.

மீன் கறியும் வந்தது

அமைச்சர்கள் மற்றும் பயனர்களிடமிருந்து கிடைத்த பின்னூட்டங்களை கவனத்தில் கொண்டு, ரயில் நிலையங்களில் உணவகங்களை நடத்தி வரும் இந்திய ரயில்வேயின் துணை நிறுவனமான இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன், "பிராந்திய விருப்பங்களுக்கு" முன்னுரிமை கொடுத்து பழைய மெனுவை திரும்ப கொண்டுவந்துள்ளது.அத்துடன் கேரளாவின் ஸ்பெசலான மீன் கறிகளையும் சேர்த்துள்ளது.

English summary
IRCTC Restores Kerala Dishes On Menu After Outrage, Kerla got fish curry meals as a bonus
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X