திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போன் பண்ணாலும் எடுக்கல.. கதவை உடைத்து கொண்டு சென்று பார்த்தால்.. ரத்த வெள்ளத்தில் இஸ்ரோ விஞ்ஞானி

இஸ்ரோ விஞ்ஞானியை கொடூரமாக கொலை செய்துள்ளனர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: போன் பண்ணாலும் எடுக்கல.. அதனால் கதவை உடைத்து கொண்டு மனைவி உள்ளே சென்று பார்த்தால்.. இஸ்ரோ விஞ்ஞானி ரத்த வெள்ளத்தில் பிணமாக விழுந்து கிடக்கிறார்! இவ்வளவு கொடூரமாக விஞ்ஞானி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவை சேர்ந்தவர் சுரேஷ். இந்திரா என்ற மனைவியும் 2 பிள்ளைகளும் உள்ளனர். மகன் அமெரிக்காவிலும், மகள் டெல்லியிலும் வசித்து வருகிறார்கள். இந்திரா ஒரு பேங்கில் வேலை பார்க்கிறார்.

சுரேஷ் ஒரு விஞ்ஞானி. இஸ்ரோவின் தேசிய ரிமோட் சென்சிங் மையத்தில் வேலை பார்ப்பவர். 20 வருஷமாக ஹைதராபாத்தில்தான் சுரேஷ் பணியாற்றினார். சமீபத்தில்தான் இந்திராவை சென்னைக்கு டிரான்ஸ்பர் செய்தனர். அதனால், இருவருமே தனித்தனியாகத்தான் வசித்து வருகிறார்கள்.

போன் எடுக்கல

போன் எடுக்கல

இந்நிலையில்,சுரேஷ் நேற்று ஆபீசுக்கு செல்லவில்லை. இதனால் உடன் வேலை பார்ப்பவர்கள், அவருக்கு போன் பண்ணினார்கள். ஆனால் போன் கிடைக்கவும் இல்லை, நம்பரும் போகவில்லை. அதனால் அவரது மனைவி இந்திராவுக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லி உள்ளனர்.

ஹைதராபாத்

ஹைதராபாத்

இதனால் இந்திராவும் சுரேஷுக்கு போன் பண்ணி பார்த்தார். அப்போது அவராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால் பதறிபோன இந்திரா, உடனடியாக ஹைதராபாத் வீட்டுக்கே வந்துவிட்டார். போலீசாரின் உதவியுடன், உள்பக்கமாக பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்றார்.

விசாரணை

விசாரணை

அப்போது, சுரேஷ் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து கிடந்ததை கண்டு அலறி துடித்தார். இதையடுத்து, போலீசார் சடலத்தைக் கைப்பற்றி விசாரணையை துவங்கி உள்ளனர். அதில், சுரேஷ் தலையில் யாரோ பலமான பொருளை கொண்டு தாக்கி உள்ளார்களாம். அந்த தடயம் மட்டும் இப்போது கிடைத்துள்ளதாக தெரிகிறது.

அதிர்ச்சி

அதிர்ச்சி

யார் கொன்றார்கள், எதற்காக கொன்றார்கள் என்று இனிமேல்தான் தெரியவரும். மேலும் சுரேஷ் தங்கியிருந்த அப்பார்ட்மென்ட்டின் சிசிடிவி கேமிராவையும் ஆய்வு செய்யும் பணி நடந்து வருகிறது. எனினும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்தால்தான் உண்மை நிலவரம் தெரியவரும். இஸ்ரோ விஞ்ஞானியை இப்படி கொடூரமாக கொன்ற சம்பவம் சக விஞ்ஞானிகளிடையே அதிர்ச்சியை தந்துள்ளது.

English summary
ISRO Scientist found dead inside his Hyderabad apartment and Police investigation is going on it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X