Kerala Wife Swap:மனைவிகளை மாற்றிக் கொண்ட குரூப் வெளிநாட்டுக்கு எஸ்கேப் முக்கியபுள்ளிகள் தப்ப ப்ளான்?
திருவனந்தபுரம்: கேரளாவில் மனைவியை தங்களுக்குள் மாற்றிக்கொள்ளும் வைஃப் சுவப் விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் நடத்தும் விசாரணை மந்தம் அடைந்துள்ளதாகவும் முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி செய்வதாக பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் கூறியுள்ளனர்
கேரள மாநிலம் கோட்டயம் அருகே கருக்கச்சல் காவல்நிலையத்தில் பெண் ஒருவர் புகார் அளித்தார். அதில் தனது விருப்பத்திற்கு மாறாக தனது கணவர் தன்னை வேறு சிலருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு வலியுறுத்துவதாக பகீர் தகவலை கூறினார்.
இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- 5 நாட்கள் நடத்த முடிவு!
தான் எவ்வளவு கூறியும் இது குறித்து தனது கணவர் கண்டுகொள்ளவில்லை எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். முதலில் சாதாரணமாகத்தான் இருக்கும் என நினைத்து போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்ததில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாயினர்.

மனைவிகளை மாற்றும் குழு
ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் நபர்கள் வரை உறுப்பினர்களாக இருக்கும் டெலெக்ராம் வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் குழுக்கள் மூலமாக தங்கள் மனைவிகளை விளம்பரப்படுத்தி அதன் மூலம் இவர்கள் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்தது கேரள போலீசார் தலை சுற்ற வைத்தது. இதையடுத்து விசாரணை நடத்தப்பட்ட போது இது போன்று கேரளாவில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழுக்கள் இயங்குவதாகவும், சாதாரண கூலித் தொழிலாளிகள் தொடங்கி திரை பிரபலங்கள் அரசியல் புள்ளிகள் காவல்துறையினர் கூட இந்தக் குழுக்களில் இருப்பதும், குறிப்பிட்ட சில நபர்கள் பெண்களின் புகைப்படங்களை பதிவிட்டு, ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயித்து தங்கள் மனைவிகளை அவர்களிடம் அனுப்பி வைத்தது தெரியவந்தது.

குடும்பவிழா பெயரில் விபச்சாரம்
மேலும் அந்தக் குழுக்களில் மனைவிகளை மாற்றிக் கொள்வது, குடும்ப விழா என்ற பெயரில் சில இடங்களில் ஒன்றாகக் கூடி குரூப்செக்ஸ் எனப்படும் குழு உடலுறவு மற்றும் இயற்கைக்கு மாறான உடலுறவு ஆகியவற்றில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இந்தக் குழுக்களில் பகிரப்படும் பெண்களின் புகைப்படங்கள் அவர்களின் அனுமதி உடன் தான் பதிவேற்றபடுகிறது எனவும் அவர்களும் எவ்விதமான சலனமும் இன்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும், ஆனால் ஒரு சில பெண்கள் தங்கள் கணவர்களால் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர் எனவும் போலீசார் கூறியுள்ளனர்.

கேரளாவில் அதிர்ச்சி
இந்தச் செயல்களில் பல பெண்கள் தங்கள் விருப்பத்திற்கு மாறாக கட்டாயப்படுத்தப் படுகிறார்கள் எனவும் இது குறித்து தீவிர கவனத்துடன் விசாரிக்க வேண்டும் என்றும் விருப்பத்தின் பேரில் செல்லும் பெண்கள் கூட கிட்டத்தட்ட 90% பேர் வசதியானவர்கள் இல்லை எனவும் அவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டனர் என கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் கூட இந்த சமூக ஊடகங்களில் போலியான பெயர்களில் இயங்கி வந்திருப்பதும் விசாரணை ஆரம்பித்ததை அறிந்து தங்கள் பதிவுகளை அழித்து விட்டு குழுக்களில் இருந்து வெளியேறியதையும் போலீசார் கண்டறிந்தனர்.

குற்றவாளிகள் தப்ப முயற்சி
இந்த விவகாரம் தொடர்பாக கோட்டையம் பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் 7 பேரை கைது செய்தனர். அதன் பிறகு போலீசாரின் விசாரணை மந்தமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் குறிப்பிட்ட அந்தக் குழுக்களில் இருந்த முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதாகவும் மேலும் சிலர் தங்களது அதிகாரம் பணபலத்தை பயன்படுத்தி விசாரணையில் இருந்து தப்ப முயற்சி செய்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது

போலீசார் உறுதி
தற்போது இந்த வழக்கின் விசாரணை மந்தம் ஆகி விட்டதாக கூறும் நிலையில், இதுகுறித்து கேரள போலீசார் விளக்கம் அளித்துள்ளனர். அதாவது கோட்டையம் பெண்ணுக்கு பிறகு இந்தக் குழுக்களால் பாதிக்கப்பட்ட வேறு பெண்கள் தற்போது வரை காவல் நிலையங்களில் புகார் கொடுக்க முன்வரவில்லை என்றும், அதன் காரணமாகவே இந்த வழக்கு குறித்த விசாரணை தாமதம் ஆகி வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக காவல் நிலையங்களில் வந்து புகார் கொடுக்க முன்வந்தால் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கண்டிப்பாக கைது செய்யப்படுவார்கள் என கூறியுள்ளனர்.