திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு நாள் வாழ்ந்தாலும் நான் நானாக வாழ வேண்டும்.. ராஜினாமா செய்த கண்ணன் கோபிநாதன் அதிரடி

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: எனக்கு சுதந்திரம் வேண்டும் என்றும் நான் நானாக வாழ வேண்டும் என்றும் தாதர் நாகர் ஹவேலி ஆட்சியர் கண்ணன் கோபிநாதன் தெரிவித்தார்.

தாதர் - நாகர்ஹவேலி யூனியன் பிரதேசத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருபவர் கண்ணன் கோபிநாதன். திருச்சூர் அருகே புத்தம்பள்ளியை சேர்ந்த இவர் கடந்த ஆண்டு கேரளாவையே உலுக்கிய வெள்ளத்தின் போது தான் ஆட்சியர் என்ற எந்தவித பந்தாவும் இல்லாமல் களத்தில் இறங்கி மீட்பு பணிகளை செய்தார்.

இவர் செங்கண்ணூரில் உள்ள நிவாரண முகாமில் பொருள்களை பிரித்து அனுப்பும் பணிகளில் 8 நாட்களாக இருந்தார். அடுத்த நாள் இவரை பிற அதிகாரிகள் அடையாளம் கண்டு கொண்டதால் இவர் ஆட்சியர் என்ற விவகாரம் தெரியவந்தது.

சூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்!சூப்பர் லார்ஜ் ராக்கெட்.. வடகொரியா செய்த அதிரடி சோதனை வெற்றி.. மீண்டும் வேலையை காட்டும் கிம்!

முதல்வரின் நிதி

முதல்வரின் நிதி

இத்தகைய சேவை மனப்பான்மையை கண்டு மற்றவர்களும் ஆஹா இந்த மாதிரியான கலெக்டர் நமக்கு கிடைத்திருக்கலாமே என மனப்பால் குடித்தனர். மேலும் இவர் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ. 1 கோடி காசோலையை அளித்தார். தற்போது இவரே இன்று தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

குரலை இழந்துவிட்டேன்

குரலை இழந்துவிட்டேன்

இதுகுறித்து அவர் கூறியபோது, குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்க வேண்டும் என்றுதான் இந்த பணியில் சேர்ந்தேன். இப்போது என் சொந்தக் குரலையை இழந்துவிட்டேன்.

முயற்சி

முயற்சி

சுதந்திரமாக செயல்பட முடியாததால் ராஜினாமா செய்தேன். இந்த சிஸ்டத்தில் இருந்து கொண்டே இதை மாற்ற வேண்டும் என்று சொல்லி வருகிறோம். நான் முயற்சி செய்து பார்த்துவிட்டேன்.

படிக்க சென்றேன்

படிக்க சென்றேன்

ஆனால் இந்த சிஸ்டம் சரியாகும் என்று தெரியவில்லை. நான் மக்களுக்காக ஓரளவு செய்திருக்கிறேன். அது போதாது. இன்னும் செய்ய வேண்டும். யாராவது நான் செய்திருக்கிறேன் என கேட்டால் அதற்கு நான் விடுமுறை எடுத்துக் கொண்டு அமெரிக்காவில் உயர் படிப்பு படிக்க சென்றேன் என கூற முடியாது.

ராஜினாமா

ராஜினாமா

அதற்கு பதிலாக வேலையை ராஜினாமா செய்வதே மேல். அரசு குடியிருப்பில் தங்கியிருக்கிறேன். தற்போது வேலையை ராஜினாமா செய்துவிட்டால் அடுத்து எங்கே போவது என தெரியவில்லை. ஒரு நாளாக இருந்தாலும் நான் நானாக வாழ வேண்டும் என்றார் கண்ணன் கோபிநாத். இவர் பிர்லா தொழில்நுட்ப கல்லூரியில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார்.

English summary
Kannan Gopinath says that I have lost my voice, i want freedom to express anything.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X