திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்தில்லாமல் 9 ஆண்டில் கரிப்பூர் விமான நிலையத்தில் 4 விபத்துகள்.. எப்படி?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்தில் கடந்த 9 ஆண்டுகளில் நேற்று நடந்த விபத்து இல்லாமல் இதுவரை 9 விபத்துகள் நடந்துள்ளன.

கோழிக்கோட்டில் உள்ள கரிப்பூர் விமான நிலையத்திற்கு துபாயிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கிய போது தடம் மாறி ரன்வேயை விட்டு தாண்டி 35 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 19 பேர் பலியாகிவிட்டனர். இந்த விபத்தில் 4 குழந்தைகள், 7 பெண்கள், 7 ஆண்டுகள் இறந்துவிட்டனர். அவர்களின் அடையாளம் காணப்பட்டது.

கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த இருவருக்கு கொரோனா உறுதி கோழிக்கோடு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்த இருவருக்கு கொரோனா உறுதி

கரிப்பூர் விமான நிலையம்

கரிப்பூர் விமான நிலையம்

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த கோழிக்கோடு விபத்திற்கு முன்னர் கடந்த 9 ஆண்டுகளில் இதுவரை 4 விமான விபத்துகள் கரிப்பூர் விமான நிலையத்தில் நடந்துள்ளது. கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்ரல் 30-ஆம் தேதி கோழிக்கோடு- துபாய்க்கு கரிப்பூரிலிருந்து விமானம் புறப்பட்டது. அப்போது பறவையின் மீது மோதியதால் அதன் வலதுபுறத்தில் உள்ள என்ஜின் கோளாறு ஏற்பட்டது. எனினும் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

போதிய வெளிச்சம்

போதிய வெளிச்சம்

கடந்த 2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி சென்னையிலிருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானம் தரையிறங்கிய போது ரன்வேயில் உள்ள விளக்குகளின் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது. இது மிகப் பெரிய விபத்திலிருந்து தப்பியது. போதிய வெளிச்சம் இல்லாதது மற்றும் ரன்வேயில் சறுக்கியதால் இந்த விபத்து ஏற்பட்டது.

சறுக்கிய விமானம்

சறுக்கிய விமானம்

கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி அபுதாபியிலிருந்து கோழிக்கோடிற்கு வந்த விமானம் ரன்வேயில் சறுக்கி தரையிறங்கும் விளக்கில் மோதியது. கடந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 24-ஆம் தேதி ஜெட்டாவிலிருந்து கோழிக்கோடு வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்தது. இதில் எந்த அசம்பாவிதங்கள் ஏற்படவில்லை. இதுவரை நடந்த இந்த 4 விபத்துகளிலும் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை, காயமடையவில்லை.

முதல் சம்பவம்

முதல் சம்பவம்

ஆனால் இந்த கோழிக்கோடு விமான விபத்தில் இதுவரை 19 பேர் பலியாகிவிட்டனர். முதல்முறையாக கோழிக்கோட்டில் நடந்த மிகப் பெரிய விமான விபத்து இதுவாகும். இந்த மலைபாங்கான பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள ரன்வேயில் விமானத்தை இயக்குவதற்கும், தரையிறக்குவதற்கும் சிறப்பு பயிற்சி பெற்ற விமானிகளே ஈடுபட அனுமதிக்கப்படுகிறார்கள்.

English summary
Karipur Airport already witnesses 4 crashes within 9 years. Kozhikode crash leads Kerala a Black Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X