சிறுமியை கூட விடல.. அடுத்தடுத்து 2 பலி.. கேரளாவை வாட்டும் "ஸ்க்ரப் டைபஸ்" நோய்.. ரொம்ப ஆபத்தானது!
திருவனந்தபுரம்: கேரளாவில் ஸ்க்ரப் டைபஸ் நோய் பரவலால் 3 நாட்களில் 2 பேர் பலியாகி உள்ளனர். திடீரென கேரளாவில் பரவும் இந்த பாதிப்பு மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரளாவில் நேற்று 38 வயது நிரம்பிய திருவனந்தபுரத்தில் சுபிதா என்ற பெண் ஸ்க்ரப் டைபஸ் நோய் தாக்குதலால் பலியானார். 3 நாட்களுக்கு முன் அஸ்வதி என்ற மாணவியும் இதே நோய் தாக்குதலால் மரணம் அடைந்தார்.
கேரளாவில் திடீரென ஸ்க்ரப் டைபஸ் நோய் காரணமாக இரண்டு பேர் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுதும் வேகமெடுக்கும் குரங்கு அம்மை! ‛அலர்ட்‛டான கேரளா, மகாராஷ்டிரா! நடந்தது என்ன? பரபர தகவல்

ஸ்க்ரப் டைபஸ்
கேரளாவில் இதை "செல்லு பனி" என்று அழைப்பார்கள். ஸ்க்ரப் டைபஸ் கேரளாவில் மட்டும் பரவும் நோய் கிடையாது. கடந்த வருடம் உத்தர பிரதேசத்தில் இதே நோய் பரவியது. அதற்கு முன் ஜம்மு காஷ்மீர் முதல் நாகாலாந்து வரை 2003 -04 காலத்தில் இந்த நோய் அதிகம் பரவியது. இந்தியாவில் கேரளா உட்பட பல மாநிலங்களில் இது எண்டமிக் என்ற நிலையை அடைந்துவிட்டது. அதாவது மக்களிடையே காய்ச்சல் போல ஒன்றாக கலந்துவிட்ட நோய். இனி இதை தடுக்க முடியாது.

என்ன நோய்
அதே சமயம் இது வேகமாக பரவாது. ஸ்க்ரப் டைபஸ் ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கும் பரவும் நோய் கிடையாது. இது வைரஸ் கிடையாது. ஓரியன்டியா சுட்சுகாமுஷி' (Orientia tsutsugamushi) எனும் பாக்டீரியாவால் பரவும் நோய் ஆகும். பொதுவாக Chigger mites எனப்படும் ஒரு வகை லார்வா பூச்சிகள் மூலம் இவை பரவும்,. இந்த பூச்சிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும். காய்கறிகள் அதிக விளைவிக்கப்படும் பகுதிகளில் இந்த பூச்சிகள் காணப்படும்.

எப்படி பரவும்
இந்த பூச்சிகள் நேரடியாக கடிப்பதன் மூலமும், இந்த பூச்சிகள் கடித்த அணில்கள், எலிகள் மூலமும், பூச்சிகள் கடித்த பழங்கள் மூலமும் இந்த நோய் பரவலாம். இந்த நோய் மூலம் ஏற்படும் மரணங்களை தவிர்க்கலாம். ஆனால் ஸ்க்ரப் டைபஸ் நோய்க்கு சிகிச்சை கிடையாது. இதற்கு வேக்சின் இல்லை. இதனால் ஏற்படும் பக்க விளைவுகளை கட்டுப்படுத்தி, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, நோயாளிகள் குணப்படுத்தப்பட்டு வருகிறார்கள்.

அறிகுறிகள் என்ன
1930ல் முதலில் ஜப்பானில் இந்த நோய் பரவியது. ஸ்க்ரப் டைபஸ் பாதிப்பு ஏற்பட்டால் பூச்சி கடித்த இடத்தில் சிவப்பு சிவப்பாக இருக்கும். இது போன்று ஏற்பட்டால் உடனே மருத்துவர்களை அணுக வேண்டும். இல்லையென்றால் பாதிப்பு இன்னும் மோசமாகும். பின்னர் அது இறப்பிற்கு வழி வகுக்கும். பொதுவாக ஸ்க்ரப் டைபஸ் நோய் தாக்கி 10 நாட்களில் அறிகுறிகள் தோன்றும். தலைவலி, காய்ச்சல், உடல் குளிரடிப்பது முதல் அறிகுறி.

மரணம்
உடல் அசதி, மன குழப்பம், தொடங்கி கோமா வரை ஸ்க்ரப் டைபஸ் நோய்க்கு பல அறிகுறிகள் உள்ளன. சிலருக்கு பூச்சி கடித்த இடத்தில் ரத்த கட்டு ஏற்பட்டு அந்த உறுப்புகள் பாதிக்கும், செயல் இழக்கும் அபாயங்கள் கூட உள்ளன. இது போன்ற அறிகுறிகள் தெரிந்தவுடன் உடனே மருத்துவரை அணுக வேண்டும். doxycycline அல்லது tetracycline போன்ற மருந்துகள் இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இதற்கு வேக்சின் இல்லை.