திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இவர்கள் போராட்டக்காரர்களா இல்லை ரவுடிகளா?... ஏன் இத்தனை வன்மம்?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சபரிமலை தீர்ப்பை ஆதரித்த காரணத்துக்காக கேரளத்தில் சுவாமி சந்தீப்பானந்தா ஆசிரமம் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தினர்.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை எதிர்த்து இந்து அமைப்புகள் போராட்டத்தில் குதித்துள்ளன.

Kerala Ashram attack by Sabarimala protestors

இந்நிலையில் சபரிமலைக்கு வரும் பெண்கள் மீதும் பெண் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. சபரிமலை தீர்ப்பை சுவாமி சந்தீப்பானந்தா வரவேற்றார்.

இதையடுத்து போராட்டக்காரர்கள் அவரது ஆசிரமத்துக்கு சென்றனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து ஆசிரமமும் அடித்து நொறுக்கப்பட்டது.

தகவலறிந்த போலீஸார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் ஆசிரமத்தை நேரில் பார்வையிட்டு இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தார். மேலும் சட்டத்தை கையில் எடுக்க யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்தார்.

English summary
Ashram of Swami Sandeepanada in Kerala, was attacked by unidentified persons early on Saturday, police said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X