திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அலைகடலென திரண்ட கூட்டம்.. பினராயிக்கு கருப்பு கொடி காட்டிய பாஜக.. அந்த அழகை பாருங்க!

கேரளாவில் பாஜக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்று பெரிய காமெடி செய்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    திரண்ட கூட்டம், பினராயிக்கு கருப்பு கொடி காட்டிய பாஜக

    திருவனந்தபுரம்: கேரளாவில் பாஜக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு கருப்பு கொடி காட்ட முயன்று பெரிய காமெடி செய்துள்ளது. கேரள பாஜக கருப்பு கொடி காட்டும் வீடியோ பெரிய வைரலாகி உள்ளது.

    பல கோடிக்கு நிலம் வாங்கி, அதில் பெரிய அடித்தளம் போட்டு, பல லட்சத்திற்கு வீடு கட்டி குடியேறும் அன்று வீடு இடிந்து விழுந்தது போலத்தான் தற்போது கேரளா பாஜக சிக்கி தவிக்கிறது. கேரளாவில் பாஜகவை எது அரசியல் ரீதியாக வெற்றிபெற வைக்கும் என்று நினைத்தார்களோ அதுவே பாஜகவை தோல்வி அடைய வைத்து இருக்கிறது.

    கேரளாவில் நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் பாஜக பெரிய அளவில் தோல்வியை தழுவி உள்ளது. இந்த நிலையில் உள்ளாட்சி இடைத்தேர்தல்களுக்கு மறுநாள் பாஜக செய்த காரியம் ஒன்று இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

    எத்தனை இடங்கள்

    எத்தனை இடங்கள்

    கேரளாவில் உள்ள 39 உள்ளாட்சி தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடந்தது. இதில் 21 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி வெற்றி பெற்றது. 12 இடங்களில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் பாஜக வெறும் 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

    எத்தனை வாக்குகள்

    எத்தனை வாக்குகள்

    பாஜகவிற்கு சபரிமலை பிரச்சனை பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்றுதான் கூறவேண்டும். முக்கியமாக சபரிமலை அருகாமையில் உள்ள தொகுதிகளான பந்தளம் தொகுதியில் 12 ஓட்டுகள், புன்னப்புரா தொகுதியில் 10 ஓட்டுகள், பத்தனம்திட்டா தொகுதியில் 7 ஓட்டுகள் என்று மிக மோசமான தோல்வியை சந்தித்து உள்ளது.

    கருப்பு கொடி

    இந்த நிலையில்தான், தேர்தல் தோல்வி கோபத்தில் இருந்த பாஜகவினர், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக கருப்பு கொடி காட்ட சென்று இருக்கிறார்கள். தேர்தலில் தோல்வியில் செம கடுப்பில் இருந்த பாஜகவினர், சபரிமலை விவகாரத்தில் முதல்வர் நடந்து கொண்ட முறை சரியில்லை என்று கூறி அவருக்கு ''திமுக பாணியில்'' கருப்பு கொடி காட்ட சென்று இருக்கிறார்கள்.

    அட கடவுளே

    அட கடவுளே

    ஆனால், பல லட்சம் பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 2 பேர் மட்டும்தான் அந்த மாபெரும் கருப்பு கொடி போராட்டத்திற்கு வந்து இருக்கிறார்கள். அதுவும் கூட இவர்கள் காருக்கு அருகில் சென்றுவிட்டு கருப்பு கொடியை தூக்கி வீசிவிட்டு ஓடி இருக்கிறார்கள். இதை கேரளா பாஜக முதலில் டிவிட் செய்துவிட்டு, பின் எல்லோரும் கேலி செய்த காரணத்தால் டெலிட் செய்துவிட்டனர். பந்தளத்தில் பாஜகவிற்கு விழுந்த 12 ஓட்டில் இரண்டு ஓட்டு இவர்களுடையதுதான் என்று எல்லோரும் கிண்டல் செய்து வருகிறார்கள்.

    English summary
    Kerala BJP showed Black Flag to CM Pinarayi, See What happened next!.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X