திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நம்ம புள்ளிங்க எல்லாம் பயங்கரம்.. நட்ட நடு ரோட்டில் பஸ் டிரைவரை தெறிக்கவிட்ட பெண்.. வைரல் வீடியோ

Google Oneindia Tamil News

Recommended Video

    நட்ட நடு ரோட்டில் பஸ் டிரைவரை தெறிக்கவிட்ட பெண்.. வைரல் வீடியோ

    திருவனந்தபுரம்: "நம்ம புள்ளிங்க எல்லாம் பயங்கரம்.." என்ற பாடல் வரிக்கு ரொம்ப சரியாக பொருந்திப் போகிறார் இந்த கேரளத்து வீரமான சேச்சி.

    எவ்வளவு பெரிய வண்டி.. அதற்கு முன்பாக தைரியமாக நின்று கொண்டு, அசால்ட் செய்து விட்டாரே இந்த பெண்மணி என்பதுதான் இந்த வீடியோவை பார்ப்பவர்களுக்கு முதலில் தோன்றும் விஷயம்.

    நம்மில் பலருக்கும் வராத துணிச்சல் இந்த பெண்ணுக்கு வந்துள்ளது என்பதுதான், அந்த செயல் வைரலாக நாடு முழுக்க பரவ காரணம்.

    போர் ஒத்திகை செய்த பாகிஸ்தான்.. விரைந்த இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் பதற்றம்போர் ஒத்திகை செய்த பாகிஸ்தான்.. விரைந்த இந்திய போர்க்கப்பல்கள்.. அரபிக்கடலில் பதற்றம்

    டிராபிக் ஜாம்

    நம்ம ஊரில் அவசரமாக ஆபீஸ் போகும்போதுதான் டிராபிக் ஜாம் ஆகி அப்படியே வண்டிகள் நிற்கும். நாட்டில்தான் பொருளாதார மந்தநிலை தலைவிரித்தாடுகிறதே? வாங்க, வாங்க, வண்டி வாங்க வாங்க, என்று கார் நிறுவனங்களும், பைக் நிறுவனங்களும் கூவி கூவி அழைக்கிறதே, அப்புறம் எப்படி தினம் தினம் போக்குவரத்து நெரிசல் விழியை பிதுக்கி எடுக்கிறது? வேறு ஒன்றும் கிடையாது. ரூல்ஸை சரியாக மதிக்காமல் கண்டபடி வண்டியை ஓட்டி வருவது தான் பெரும்பாலும் டிராபிக் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கும்.

    உத்தரவு போடுங்கப்பா

    உத்தரவு போடுங்கப்பா

    சாலைக்கு நடுவே வெள்ளை கோடு என்பதை எதற்காக போட்டுள்ளார்கள் என்று லைசென்ஸ் கொடுக்கும் முன்பாக ஒரு கேள்வியை கட்டாயமாக கேட்க வேண்டும் என்று ஒரு சட்டத்திருத்தம் வந்தால் பரவாயில்லை என்ற அளவுக்குத்தான் நமது வாகன ஓட்டிகளின் வாகனம் ஓட்டும் திறமை இருக்கும். "கோட்டுக்கு இந்த பக்கம் நானும் வரமாட்டேன், நீயும் வரக்கூடாது" என்ற வடிவேலு டயலாக்கை காலையில் எழுந்ததும், கால்மணி நேரம் கால் கடுக்க நின்றபடி பாராயணம் செய்ய வேண்டும் என்ற ஒரு உத்தரவையும், பிரதமர் திடீரென டிவியில் தோன்றி பிறப்பித்தால் தேவலை.

    மீறாமல் ஓட்டுவோர் யாருமில்லை

    மீறாமல் ஓட்டுவோர் யாருமில்லை

    சாலை மத்தியில் போடப்பட்டுள்ள கோட்டை, வளர்ந்த நாடுகளில் வாகனம் ஓட்டுவோர் பெரும்பாலும் மீறுவதில்லை. ஆனால், நமது நாட்டில் அதை மீறாமல் யாரும் வாகனம் ஓட்டுவது இல்லை. அப்படியே, வந்து அடைத்துக்கொண்டு நின்று விடுவார்கள். எதிரில் ஒழுங்காக ரூல்ஸை மதித்து செல்வோரும், மேற்கொண்டு போக வழியின்றி பேந்த பேந்த விழித்தபடி நிற்க வேண்டி வரும். ஆனால் எதிரே வந்தவர்களை தட்டி கேட்க தைரியம் இன்றி, அந்நியன் அம்பி போல, மனதுக்குள்ளே புழுங்கி பல்லை நறநறவென்று கடித்துக் கொண்டு, ஆபீஸ் செல்ல முற்படுவார்கள்தான் அதிகம். ஒருவேளை தட்டி கேட்டு, எதிரே வருபவன் பல்லை தட்டிவிட்டால் என்ன செய்வது என்ற கோழைத்தனம் தான் இதற்கு காரணம்.

    பயங்கரம்

    பயங்கரம்

    ஆனால், இங்கு தான், இந்த கேரளத்து வீர மங்கை வித்தியாசப்படுகிறார். வலது பக்கமாக ஏறி வந்தது, டூ வீலரோ, ஆட்டோவோகூட கிடையாது. அரசு பேருந்து. ஆனால் அசரவில்லை ஸ்கூட்டியில் சென்ற பெண்மணி. அப்படியே நடுரோட்டில் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவரை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தார். ஆஹா.. ஒரு முடிவோடுதான் வந்து இருக்கிறார் என்பது டிரைவருக்கும் புரிந்துவிட்டது. மேற்கொண்டு எதுவும் பேசாமல் அப்படியே வண்டியை இடது பக்கமாக திருப்பி, கஷ்டப்பட்டு தனது எல்லைக்குள் கொண்டுசென்று பவ்யமாக வண்டி ஓட்டி சென்றார் அந்த டிரைவர்.

    வீடியோ

    வீடியோ

    பஸ்சின் பின்னால் எத்தனையோ வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன. ஆனாலும் ஒரு இன்ச் கூட அசையாமல் உறுதியாக நின்றார், அந்தப் பெண்மணி. பஸ் டிரைவர் என்ன சொல்வாரோ, பின்னால் வரும் வண்டி ஓட்டுனர்கள் என்ன சொல்வார்களோ, என்ற அச்சம் அவருக்கு கிஞ்சித்தும் இல்லை. கேரள பெண்மணியின் இந்த செயல்,நாடு முழுக்க பாராட்டுகளைப் பெற்று வருகிறது. யாரோ ஒருவர் இந்தக் காட்சியை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவேற்ற.., அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

    English summary
    Kerala women showing her courage To regulate government bus driver to take his own correct path, this video goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X