திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்.ஆர்.சி, என்.பி.ஆர். நடைமுறைப்படுத்த முடியாது: கேரளா அமைச்சரவை அதிரடி முடிவு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி), மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு( என்.பி.ஆர்) ஆகியவற்றை மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்று கேரளா அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா சட்டசபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது.

Kerala cabinet decides not to implement NRC and NPR

ஆனால் ஆளுநராகிய தம்மிடம் தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்துக்கு கேரளா அரசு சென்றது தவறு என்கிறார் மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான். இது தொடர்பாக கேரளா அரசிடம் அறிக்கையும் கேட்டுள்ளார் ஆளுநர் ஆரிப் முகமது கான்.

இந்நிலையில் மத்திய அரசின் என்.ஆர்.சி. எனப்படும் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறை மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பதிவேடு (என்.பி.ஆர்) ஆகியவற்றை மாநிலத்தில் செயல்படுத்த முடியாது என்று கேரளா அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது.

50 லட்சம் முஸ்லீம் 'ஊடுருவல்காரர்கள்'.. நாட்டை விட்டே விரட்டப்படுவார்கள்.. பாஜக தலைவர் பரபர பேச்சு 50 லட்சம் முஸ்லீம் 'ஊடுருவல்காரர்கள்'.. நாட்டை விட்டே விரட்டப்படுவார்கள்.. பாஜக தலைவர் பரபர பேச்சு

அதேநேரத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு மட்டும் ஒத்துழைப்பு வழங்குவது என்றும் கேரளா அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

English summary
The Kerala Cabinet has decidet that the controversial National Register of Citizens (NRC) and National Register of Citizens (NRC) will not implement in the State.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X