திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கன்னியாஸ்திரியுடன் நெருக்கம்.. பார்த்த இன்னொரு கன்னியாஸ்திரி கொலை.. 28 வருடம் பிறகு பரபர தீர்ப்பு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கன்னியாஸ்திரியுடன் அதிகாலை நேரத்தில், உல்லாசமாக இருந்துள்ளார் ஒரு பாதிரியார். இதை பார்த்த மற்றொரு கன்னியாஸ்திரியை இரக்கமே இல்லாமல் அடித்து கிணற்றில் வீசி கொலை செய்துவிட்டார் பாதிரியார்.

Recommended Video

    கள்ள உறவு… கன்னியாஸ்திரி படுகொலை.. 28 ஆண்டுகள் கடந்த வழக்கு.. பாதிரியார் குற்றவாளி..!

    கேரளாவையே உலுக்கிய இந்த சம்பவத்தில் 28 வருடங்களுக்கு பிறகு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கொலை செய்தது பாதிரியார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

    1992ம் ஆண்டு அந்த கொலை நடந்திருந்தது. அப்போது கொலையான கன்னியாஸ்திரி அபயாவுக்கு வயது 21. இளம் வயதில் பக்தி நோக்கத்தோடு கன்னியாஸ்திரியானவர்.

    28 ஆண்டுகள் நடைபெற்ற கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு: 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு28 ஆண்டுகள் நடைபெற்ற கேரளா கன்னியாஸ்திரி அபயா கொலை வழக்கு: 2 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு

    கோட்டயத்தில் கன்னியாஸ்திரி

    கோட்டயத்தில் கன்னியாஸ்திரி

    கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த அபயா, கோட்டயத்தில் உள்ள பயஸ் டென்த் என்ற கான்வென்ட்டில் கன்னியாஸ்திரியாக சேர்ந்தார்.
    ஆனால், 1992ம் ஆண்டு மார்ச் 27ம் தேதி, அவர் வாழ்நாளில் கண்டறியாத ஒரு அநியாயத்தை அவர் காண நேரிட்டது.

    அதிகாலை வேளை

    அதிகாலை வேளை

    அதிகாலை சுமார் 4.30 மணி இருக்கும். கிச்சனுக்கு தண்ணீர் குடிக்க நடந்து போய்க் கொண்டிருந்தார் அபயா. ஆனால், அங்கு, தான், பெரும் மதிப்பு வைத்திருந்த பாதிரியார் தாமஸ் கூட்டூர் மற்றும் கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் உல்லாசமாக இருந்துள்ளதை அபயா பார்க்க நேரிட்டது. அதிர்ச்சியில் உறைந்தார் அபயா.

    பாதிரியாரின் களியாட்டம்

    பாதிரியாரின் களியாட்டம்

    இந்த உல்லாச கூட்டணியில், மற்றொரு பாதிரியான ஜோஸ் பூத்ரிக்காயில் என்பவரும் இருந்ததாக கூறப்படுகிறது. இரு பாதிரியார்களும், ஒரு கன்னியாஸ்திரியும் அங்கே இருந்த அந்த போஸை பார்த்து, அதிர்ச்சியால் அலறிவிட்டார் அபயா. இதை தாமசும் பார்த்துவிட்டார். அவருக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. ஊருக்கு தெரிந்துவிட கூடாது என்பதால் அதிகாலை நேரத்தில் காம களியாட்டம் நடத்தினால், அதையும் ஒருவர் பார்த்துவிட்டாரே என்று வெறியேறியது தாமசுக்கு.

    கன்னியாஸ்திரி கொலை

    கன்னியாஸ்திரி கொலை

    இரும்பு கம்பியை எடுத்து வந்து அபயா தலையில் ஓங்கியடித்தார். துடித்து விழுந்த அந்த இளம்பெண்ணை, இரக்கமேயில்லாமல் கிணற்றில் தூக்கி வீசினார். இதற்கு, பாதருடன், களியாட்டம் செய்த, கன்னியாஸ்திரி செபியும் உடந்தையாக இருந்துள்ளார். பிறகு எதுவும் நடக்காதது போல டிராமா செட் செய்துவிட்டனர். மறுநாள் காலை, அபயா கிணற்றில் கிடந்ததை சிலர் பார்த்து பாதிரியாரிடம் சொல்ல அவரும் ஒன்றும் தெரியாதவர் போல, பரிதாபப்பட்டு உச்சுக் கொட்டியபடியே போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அபயா கிணற்றில் குதித்து தற்கொலை செய்ததாக கேஸை முடித்து வைத்தனர் போலீசார்.

    சிபிஐ விசாரணையில் திருப்பம்

    சிபிஐ விசாரணையில் திருப்பம்

    ஆனால், அபயாவின் பெற்றோர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அபயா தற்கொலை செய்யவில்லை, கொலை செய்யப்பட்டதாக சந்தேகிப்பதால் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. அப்போதுதான் வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

    தீர்ப்பு

    தீர்ப்பு

    பாதிரியாரையும், கன்னியாஸ்திரியையும் கைது செய்து உண்மையை வெளியே கொண்டு வந்தது சிபிஐ. வழக்கு அத்தனையும் ஜோடிக்கப்பட்டது. அபயா அடித்துதான் கொல்லப்பட்டார் என்பதை ஆதாரங்களோடு புட்டு புட்டு வைத்தது சிபிஐ. இந்த நிலையில்தான் 28 வருடங்களுக்கு பிறகு இன்று சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சனல் குமார் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், பாதிரியார் தாமஸ் கூட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய இருவரும் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி. தண்டனை விவரம் நாளை அறிவிக்கப்படுகிறதாம்.

    ஒருவர் விடுதலை

    ஒருவர் விடுதலை

    பாதிரியார் மற்றும் கன்னியாஸ்திரி மீது மீது கொலை வழக்கு, குற்றச் சதி, ஆதாரங்களை அழித்தல் ஆகிய பிரிவுகளில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
    மற்றொரு பாதிரியாரான ஜோஸ் பூத்ரிக்காயிலுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்பதால் அவர் வழக்கிலிருந்து 2 வருடங்கள் முன்பே விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    A special CBI court in Kerala's Thiruvananthapuram today delivered its verdict in a 28-year-old murder case as it held a Catholic priest and a nun guilty. Sister Abhaya, 21, was murdered and her body was dumped inside the well of a convent in Kottayam in 1992.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X