• search
திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

கஸ்டடியில் சாவதா?.. நியாயப்படுத்தவே முடியாது.. ஸ்டேன் சாமி மரணம்.. மனமுடைந்து கலங்கிய பினராயி!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: சமூக போராளி ஸ்டேன் சாமியின் மரணத்திற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மிகவும் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார்.

  Who Is Stan Swamy? | அப்பா.. விண்ணை முட்டும் பழங்குடியினரின் அழுகை | Oneindia Tamil

  தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 83 வயதான இயேசு சபை பாதிரியார் ஸ்டேன் சாமி கடந்த 2020ம் ஆண்டு என்ஐஏ மூலம் ஜார்கண்டில் கைது செய்யப்பட்டார். 2018ல் பீமா - கொரேகான் வன்முறையை தூண்டியதாகவும், எல்கார் பரிஷத் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியதன் மூலம் வன்முறையை ஏற்படுத்தியதாகவும் இவர் மீது வழக்கு உள்ளது. அதோடு மாவோயிஸ்ட் அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

  ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா?.. தொண்டர்களை சந்திக்கிறார்?.. ஜூலை 5 க்கு பிறகு சாத்தியம்? ஜெ. நினைவிடத்திற்கு செல்கிறார் சசிகலா?.. தொண்டர்களை சந்திக்கிறார்?.. ஜூலை 5 க்கு பிறகு சாத்தியம்?

  பார்க்கின்ஸன் உள்ளிட்ட பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டும் கூட இவருக்கு பெயில் தரப்படவில்லை. தொடர்ந்து சிறையில் அவதிப்பட்டு வந்தவரின் உடல்நிலை மோசமான நிலையில் தனியார் மருத்துவமனையில் மகாராஷ்டிராவில் இவர் சிகிச்சை பெற்று வந்தார்.

  வெண்டிலேட்டர்

  வெண்டிலேட்டர்

  கடந்த சில தினங்களாக இவரின் உடல்நிலை மோசமான நிலையில், இவருக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இவரின் உடல்நிலை மோசமான போதும் கூட இவருக்கு இரண்டு முறை என்ஐஏ நீதிமன்றம் பெயில் மறுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக ஸ்டேன் சாமி மரணம் அடைந்தார். இவரின் வழக்கறிஞர் இன்று மும்பை கோர்ட்டில் ஸ்டேன் சாமியின் மறைவை அறிவித்தார்.

  மறைவு

  மறைவு

  ஸ்டேன் சாமியை விடுதலை செய்ய வேண்டும் என்று தொடக்கத்தில் இருந்து குரல் கொடுத்தவர்களில் கேரள முதல்வர் பினராயி விஜயன் முக்கியமானவர். இவரின் கைது அடிப்படை ஆதாரமற்றது. உடனே ஸ்டேன் சாமியை விடுதலை செய்ய வேண்டும். வயது மிகுந்த போராளியை, சமூக சேவகரை சிறையில் வைத்து இருப்பது கொடுமையானது.

   எதிர்ப்பு

  எதிர்ப்பு

  பார்க்கின்சன் நோயால் அவதிப்படும் நபரை, பழங்குடிகளின் நலனுக்காக போராடிய நபரை கைது செய்தது தவறு. அவருக்கான நீதி மறுக்கப்படுகிறது என்று கடந்த சில மாதங்களுக்கு முன்பே ஸ்டேன் சாமியின் விடுதலைக்காக பினராயி விஜயன் குரல் கொடுத்து இருந்தார்.

   இரங்கல்

  இரங்கல்

  இந்த நிலையில்தான் தற்போது ஸ்டேன் சாமி மறைவிற்கு பினராயி விஜயன் உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளது. ஸ்டேன் சாமியின் மறைவு செய்தி கேட்டு துயருற்றேன். நாட்டிலேயே மிகவும் அதிகமாக நலிந்த மக்களுக்காக வாழ்நாள் முழுக்க போராடிய நபர் இப்படி கஸ்டடியில் மரணம் அடைவது ஒருபோதும் நியாயப்படுத்த முடியாத ஒன்று.

  உருக்கம்

  உருக்கம்

  நீதியின் இத்தகைய பரிதாபத்திற்கு நமது ஜனநாயகத்தில் ஒரு போதும் இடம் கிடையாது. அவரின் மறைவிற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள் என்று மிகவும் உருக்கமாக பினராயி விஜயன் டிவிட் செய்துள்ளார். ஸ்டேன் சாமி தமிழ்நாட்டை சேர்ந்தவர், மார்க்சிய - கம்யூனிச சித்தாந்தம் கொண்டவர் என்பதால் இவர் மீது தொடக்கத்தில் இருந்தே பினராயி விஜயன் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  English summary
  Unjustified: Kerala CM Pinarayi Vijayan heart breaking condolences to Stan Swamy death.
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X