திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமூக பரவலை தடுக்க.. WHO வழிகாட்டுதலை ஸ்ட்ரிக்ட்டாக ஃபாலோ செய்யும் பினராயி.. கைவசம் சூப்பர் ஐடியா

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கொரோனா சோதனையை விரிவுப்படுத்த கேரள அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு பூர்ண குணமடைந்த வயதான தம்பதி - வீடியோ

    கேரளாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 295 ஆக உள்ளது. இங்கு பலியானோரின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் மாநில அளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் மூன்றாவது இடத்தில் கேரளா இருக்கிறது.

    கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மேலும் குறைக்க கேரளா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் நர்ஸ்கள், மருத்துவர்கள் நோய் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க கேரளாவில் ரோபோக்கள் பயன்படுத்தப்பட்டன.

    முன்னெச்சரிக்கை

    முன்னெச்சரிக்கை

    இதைத் தொடர்ந்து மாநில எல்லைகளை மூடுதல் உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கேரளா அரசு செய்துள்ளது. இந்த நிலையில் கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது குறித்து சோதனை செய்யும் விரைவு சோதனை கருவியும் வாங்கப்பட்டுள்ளது. இதை கொண்டு கொரோனா நோயாளி கண்டறியப்பட்டு விரைவில் சிகிச்சை அளிக்கப்படுவர்.

    உலக சுகாதார நிறுவனம்

    உலக சுகாதார நிறுவனம்

    இந்த நிலையில் கொரோனாவை தடுக்க என்னென்ன நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதல்களை கூறி வருகிறது. காய்ச்சல், சளி, மூச்சிரைப்பு, இருமல் ஆகிய அறிகுறிகள் இருந்தால் மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. ஆனால் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது இரண்டோ இருந்தாலும் அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட வேண்டும் என WHO அறிவுறுத்தியுள்ளது.

    பினராயி விஜயன்

    பினராயி விஜயன்

    அப்போதுதான் சமூக பரவலைத் தடுக்க முடியும். கொரோனாவை ஒழிக்க முடியும். இந்த நிலையில் WHO அறிவுரைகளின்படி தங்கள் பரிசோதனையை விரிவாக்க திட்டமிட்டுள்ளதாக கேரளா முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் கொரோனா சோதனையை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. தற்போது வரை மேற்கண்ட வைரஸ் அறிகுறிகள் இருந்தால் மட்டுமே அவர்களது ரத்த மாதிரியும் ஸ்வாப் டெஸ்டும் எடுக்கப்படுகிறது.

    பினராயி விஜயனுக்கு பாராட்டுகள்

    இனி கொரோனா அறிகுறிகளில் ஒன்றோ அல்லது இரண்டோ இருந்தாலும் அவர்களுக்கு சோதனை நிகழ்த்தப்படும். இதில் விரைவு சோதனை முறையில் பரிசோதனை நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து பினராயி விஜயனுக்கு ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

    English summary
    Kerala government decides to make testing more widespread, says Pinarayi Vijayan.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X