திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கேரள யானை மத வெறியனால் கொல்லப்பட்டது.." எச்.ராஜா பகீர் கருத்து.. மதசாயம்.. பினராயி விஜயன் காட்டம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் யானை வெடிவைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மத சாயம் பூசப்படுவதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் தலைவர்களும் இதே குற்றச்சாட்டை பாஜக தலைவர்கள் மீது முன்வைத்துள்ளனர்.

Recommended Video

    கேரளா யானை கொல்லப்பட்ட விவகாரம்....வேறுமாதிரி கோணத்தில் பேசும் பாஜக தலைவர்கள்

    கேரள மாநிலத்தில் அன்னாசிப் பழத்துக்கு உள்ளே வெடிவைத்து கொடுத்து ஒரு யானை கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. அதுவும் மலப்புரம் மாவட்டத்தில் இந்த யானை பலியானதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

    மலப்புரம் மாவட்டத்தில் குறிப்பிட்ட சிறுபான்மை மதத்தினர் அதிகப்படியாக வாழ்வதால் இந்த பிரச்சனையை வேறு மாதிரியான கோணத்தில் வலதுசாரியினர் சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்க தொடங்கினர்.

    போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்தோம்.. தாங்க முடியவில்லை.. ஷாக் தந்த யானையின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்போஸ்ட்மார்ட்டம் செய்து பார்த்தோம்.. தாங்க முடியவில்லை.. ஷாக் தந்த யானையின் பிரேத பரிசோதனை ரிப்போர்ட்

    மேனகா காந்தி ஆரம்பித்தார்

    மேனகா காந்தி ஆரம்பித்தார்

    முன்னாள் மத்திய அமைச்சரும், பாஜகவை சேர்ந்த, விலங்குகள் நல ஆர்வலர் மேனகா காந்தி ஒரு சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்தார். அதில், மலப்புரம் மாவட்டம், விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு எதிராக மிகவும் மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளும் மக்களை கொண்ட பகுதி என்றும், சாலைகளில் விஷத்தைத் சுமார் 300 முதல் 400 பறவைகள் மற்றும் நாய்கள் ஒரே நேரத்தில் கொல்லப்படது அந்த மாவட்டத்தில் தானென்றும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

    மலப்புரம் மாவட்டம் இல்லை

    மலப்புரம் மாவட்டம் இல்லை

    ஆனால் கேரளாவில் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளுங்கட்சி இரண்டுமே இந்த குற்றச்சாட்டை மறுக்கின்றன. யானை பலியான சம்பவம் என்பது பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மன்னார்காடு வன சரகத்திற்கு உட்பட்ட பகுதி என்றும், மலப்புரம் மாவட்டம் கிடையாது என்றும், மேலும், பறவைகள் மற்றும் நாய்களுக்கு விஷம் வைத்து கொன்ற சம்பவம் எதுவுமே அந்த மாவட்டத்தில் இதுவரை பதிவானது இல்லை. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் மேனகா காந்தி இவ்வாறு தெரிவித்தார் என்றும் கேள்விகள் எழ ஆரம்பித்தன.

    பினராயி விஜயன் குற்றச்சாட்டு

    மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் வெளியிட்ட டுவிட்டர், பதிவிலும், மலப்புரம் மாவட்டம் என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்திருந்தார். இதனிடையே கேரள முதல்வர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், யானை கொல்லப்பட்ட சம்பவத்தில் நீதி பெற்றுத் தரப்படும் என்றும், ஆனால் இந்த விஷயத்தை சிலர் வெறுப்பு பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார். தவறான தகவல்களுடன் பொய்கள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன. அரைகுறை உண்மைகளை வைத்துக்கொண்டு மதவெறி பிரச்சாரங்கள் செய்யப்படுகின்றன. இவ்வாறு முதல்வர் குற்றஞ்சாட்டியுள்ளார் .

    ராஜா சீற்றம்

    மலப்புரம் மாவட்டத்தில் சம்பவம் நடக்கவில்லை என்று திரும்ப திரும்ப கேரள அரசு கூறிய பிறகும், பாஜக தலைவர்கள் இதை விடுவதாக இலல்லை. இதனிடையே பாஜக தேசிய பொதுச் செயலாளரான எச்ச ராஜா வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், கேரளா மல்லப்புரத்தில் கர்ப்பிணி யானைக்கு அன்னாசிப்பழத்தில் கல்வெடி வைத்து யானையும் அதன் கர்ப்பத்தில் இருந்த குட்டியும் ஒரு மதவெறியனால் கொல்லப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜல்லிக்கட்டிற்கு எதிராக மல்லுக்கட்டிய இந்து விரோத ஈவென்சலிஸ்ட் கூட்டம், பீட்டா எல்லாம் எங்கே. வெட்கம். இவ்வாறு தெரிவித்துள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

    English summary
    Kerala Chief Minister Pinarayi Vijayan, Thursday rejected the factually incorrect statements made by the BJP and central leadership in connection with the death of a wild elephant in the state
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X