திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பொதுமக்களிடம் கெடுபிடி வேண்டாம்...போக்குவரத்து அதிகாரிகளுக்கு பினராயி அறிவுறுத்தல்

Google Oneindia Tamil News

Recommended Video

    Watch Video : Which country have higher amount of penalty for traffic violation

    திருவனந்தபுரம்: மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டம் செப்.1 முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் பொதுமக்களிடம் கெடுபிடி காட்ட வேண்டாம் என போக்குவரத்து அதிகாரிகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவுறுத்தியுள்ளார்.

    புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்ட மசோதாவை நடந்து முடிந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் நிறைவேற்றியது மத்திய அரசு. இதற்கு பலத்த எதிர்ப்பு உள்ள நிலையில், கடந்த ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வசூலிக்கப்பட்ட அபராதத் தொகையை காட்டிலும் பன்மடங்கு அபராதத் தொகையை அதிகரித்து இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    kerala cm pinarayi vijayan to reduce traffic violation fines

    இந்த புதிய சட்டம் அமலுக்கு வந்தது முதல், நாடு முழுவதும் போக்குவரத்துக் காவலர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதமும், சண்டையும் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரளாவில் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் தொடர்ந்து போக்குவரத்துக் காவலர்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் இடையே தகராறு ஏற்படுவதை அம்மாநில ஊடகங்கள் பெரியளவில் செய்தி வெளியிட்டன.

    ஏகாதசியில் விண்கலம் அனுப்பியதால் அமெரிக்காவுக்கு வெற்றி.. சொல்வது மாஜி ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்ஏகாதசியில் விண்கலம் அனுப்பியதால் அமெரிக்காவுக்கு வெற்றி.. சொல்வது மாஜி ஆர்.எஸ்.எஸ்.பிரமுகர்

    எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் கொடியேறி பாலகிருஷ்ணன் ஆகியோர் அபராதத் தொகையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் பினராய் விஜயனை வலியுறுத்தினர். இதையடுத்து அவர் போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி அதில் சில முடிவுகளை எடுத்துள்ளார்.

    மேலும், பொதுமக்களிடம் போக்குவரத்துக் காவலர்கள் கெடுபிடி காட்டாமல் சந்தேகத்திற்குரிய நபர்களை மட்டும் பிடித்து விசாரிக்குமாறு பினராயி அறிவுறுத்தியுள்ளார். உயர்த்தப்பட்ட அபராதத் தொகையால் ஏழை எளிய நடுத்தர வர்க்கத்தினர் மிகுந்த பாதிப்புக்கு ஆளாவதை அறிந்த பினராயி, புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தை கேரளாவில் நிறுத்தி வைக்கும் முடிவுக்கு வந்துள்ளார்.

    English summary
    kerala cm pinarayi vijayan to reduce traffic violation fines
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X