திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரள முதல்வர் பினராயி அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்.. படுதோல்வி.. ஆட்சி தப்பித்தது!

கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள சட்டசபையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு எதிராக காங்கிரஸ் மூலம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராக அங்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. கேரள தங்க கடத்தல் தொடங்கி பல்வேறு புகார்கள் மற்றும் முறைகேடுகளை குற்றஞ்சாட்டி இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

காங்கிரஸ் சார்பாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி மூலம் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ விடி சதீஷன் தீர்மானத்தை தாக்கல் செய்தார்.

இ - பாஸ் வேண்டாம்.. தனிமைப்படுத்த தேவை இல்லை.. கட்டுப்பாடுகளை நீக்கிய கர்நாடக அரசு.. அதிரடி!இ - பாஸ் வேண்டாம்.. தனிமைப்படுத்த தேவை இல்லை.. கட்டுப்பாடுகளை நீக்கிய கர்நாடக அரசு.. அதிரடி!

விவாதம்

விவாதம்

இந்த நிலையில் தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய சதீஷன், கேரளாவில் தங்க கடத்தல் வழக்கில் முதல்வர் நேரடியாக சம்மந்தப்பட்ட இருக்கிறார். அவருக்கு இதில் நேரடியாக தொடர்பு உள்ளது. இதை மனதில் வைத்து உடனே பினராயி விஜயன் ராஜினாமா செய்ய வேண்டும். கேரள தங்க கடத்தல் வழக்கில் தொடர்புடைய ஆளும் கட்சியினர் அனைவரையும் கைது செய்து விசாரிக்க வேண்டும்.

அதானி லீஸ்

அதானி லீஸ்

அதேபோல் திருவனந்தபுரம் விமான நிலையத்தை அதானிக்கு லீசுக்கு கொடுத்ததில் பினராயி அரசு மறைமுகமாக உதவி உள்ளது. அதானிக்கு நெருக்கான உறவினர் ஒருவரின் நிறுவனத்திடம் நிர்வாக ரீதியான உதவியை இந்த ஏலம் தொடர்பாக அரசு கேட்டுள்ளது. இதையும் தனியாக விசாரிக்க வேண்டும். அதேபோல் கேரளாவில் மக்களுக்கு வீடு கட்டி கொடுத்ததில் ஊழல் நடந்துள்ளது.

பதில் சொன்னார்

பதில் சொன்னார்

இதை கண்டிப்பாக விசாரிக்க வேண்டும் என்று சதீஷன் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசினர். இவருக்கு ஆதரவாக யூனியன் முஸ்லீம் லீக் எம்எல்ஏக்கள் பேசினார்கள். இதையடுத்து பினராயி விஜயன் குற்றச்சாட்டு அனைத்திற்கும் பதில் சொன்னார்.

கூச்சல் குழப்பம்

கூச்சல் குழப்பம்

ஆனால் பினராயியை பேச விடாமல் சபையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேனர்களை காட்டி கூச்சல் குழப்பத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அவையில் சில மணி நேரம் பரபரப்பட்டு நிலவியது. பெரும் கூச்சல் குழப்பத்திற்கு பின் அங்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடந்தது.

தப்பித்தார்

தப்பித்தார்

இதில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. பினராயி விஜயனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான எல்டிஎப் கூட்டணிக்கு ஆதரவாக 87 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். காங்கிரஸ் தலைமையிலான யுடிஎப் கூட்டணியின் 40 எம்எல்ஏக்கள் ஆட்சிக்கு எதிராக வாக்களித்தனர். இதனால் பெரும்பான்மைக்கு தேவையான 71 இடங்களை விட அதிக இடங்கள் பெற்று, பினராயி விஜயன் ஆட்சியை தக்க வைத்துக்கொண்டார்.

English summary
Kerala: CM Pinarayi Vijayan wins against the nonconfidence motion brought by Congress' UDF.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X