திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா கடலோரப் பகுதிகளில் கொரோனா சமூகப் பரவலாக மாறியது- முதல்வர் பினராயி விஜயன்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவின் கடலோரப் பகுதிகளில் கொரோனா சமூகப் பரவலாக மாறியிருப்பதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது. தற்போதைய நிலையில் கேரளாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,000 ஆக உள்ளது.

Kerala confirms community transmission in coastal areas

இதனையடுத்து கேரளாவின் கடலோரப் பகுதிகளில் தீவிர லாக்டன் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது:

திருவனந்தபுரம் அருகே புல்லுவில, பூந்துறாவில் கொரோனா தாக்கமானது சமூகப் பரவலாக இருக்கிறது. இதனால் இப்பகுதிகளில் திருவனந்தபுரத்தைப் போல தீவிர லாக்டவுன் அமல்படுத்தபட உள்ளது.

கொரோனாவுக்கு சிகிச்சை: நடிகை ஐஸ்வர்யா ராய் மும்பை மருத்துவமனையில் அனுமதிகொரோனாவுக்கு சிகிச்சை: நடிகை ஐஸ்வர்யா ராய் மும்பை மருத்துவமனையில் அனுமதி

கரிங்குளம் பஞ்சாயத்தில் புல்லுவிலவில் 97 பேருக்கு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 51 பேருக்கு பாசிட்டிவ் என ரிசட்ல் வந்துள்ளது. பூந்துறாவில் 50 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 26 பேருக்கு பாசிட்டிவ் என தெரியவந்துள்ளது.

புதுகுறிசேரி பகுதியில் 75 பேரிடம் நடத்தப்பட்ட சோதனையில் 20 பேருக்கு கொரோனா உறுதியானது. அஞ்சுதெங்குவில் 83 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதில் 15 பேருக்கு உறுதியாகி உள்ளது. கொரோனா அதிதீவிரமாக பரவி இருக்கிறது என்பதையே இவை வெளிப்படுத்துகிறது. இவ்வாறு பினராயி விஜயன் கூறினார்.

English summary
Kerala Chief Minister Pinarayi Vijayan has confirmed community transmission in coastal areas.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X