கேரளாவில் 2 குழந்தைகளுக்கு நோரோ வைரஸ் பாதிப்பு - மருத்துவமனையில் சிகிச்சை
திருவனந்தபுரம்: கேரளாவில் விழிஞ்சம் பகுதியில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நோரோ வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது.
உலகம் முழுவதும் புது புது வைரஸ்களால் நோய் பரவல் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவுக்கு வராத நிலையில் புதிதாக நோரோ வைரஸ் பரவத் தொடங்கியுள்ளது.

நோரோவைரஸ் என்பது ஒரு தொற்றுநோயாகும். இது சில நேரங்களில் 'வயிற்றுக் காய்ச்சல்' அல்லது 'குளிர்கால வாந்தி காய்ச்சல்' என்றும் குறிப்பிடப்படுகிறது. இது அசுத்தமான உணவு, நீர் மற்றும் நிலப்பரப்புகள் மூலம் பரவுகிறது.
நோரோ வைரஸின் முக்கிய அறிகுறிகள் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் வயிற்று வலி என்று கேரளாவில் உள்ள மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இரண்டு சிறுமிகளுக்கு நேரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் உடல்நிலை சீராக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
47 வயது நபர் பலி.. கேரளாவில் பரவும் ”வெஸ்ட் நைல் வைரஸ்”! அறிகுறிகள் என்ன? முழு தகவல்கள் இதோ!
கேரளாவில் இருவருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்படுள்ளது குறித்து, செய்தியாளர்களிடம் பேசிய கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், "விழிஞ்சம் பகுதியில் 2 பேருக்கு நோரோ வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும், கவலை கொள்ளத் தேவையில்லை என்றார்.
அப்பகுதியில், சுகாதாரத் துறை நிலைமையை ஆய்வு செய்துள்ளது. அப்பகுதியில் வசிப்பவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நோரோ வைரஸ் பாதிப்புக்குள்ளான 2 குழந்தைகளின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.