திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரம்யாவுக்கு ஒரு கார் வாங்கித் தர்றது தப்பா..கேரள கதர்ச் சட்டைகளுக்குள் சண்டை.. கலகலக்கும் திருச்சூர்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: ஆலத்தூர் எம்பி ரம்யா ஹரிதாஸுக்கு கார் வாங்கிக் கொடுப்பதற்கு மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் திருச்சூர் மாவட்ட காங்கிரஸுக்குள் வாக்குவாதம் நிலவி வருகிறது.

ஆலத்தூரை சேர்ந்தவர் எம்பி ரம்யா ஹரிதாஸ். இவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். இவர் மீது நம்பிக்கை வைத்து ராகுல்காந்தி இவருக்கு போட்டியிடும் வாய்ப்பை கொடுத்தார்.

அதில் வெற்றி கண்டார். இந்த நிலையில் இவருக்கு ஆலத்தூர் இளைஞர் காங்கிரஸ் கட்சி கார் ஒன்றை வாங்கிக் கொடுக்க முடிவு செய்துள்ளது. இதற்கான பணத்தை சமூகவலைதளங்களில் பொதுமக்கள் அல்லாது காங்கிரஸ் கட்சியினரிடம் திரட்டுவது என முடிவு செய்யப்பட்டது. அவ்வாறு நிதியில் கிடைக்கும் நிதி மூலம் வாங்கும் காரை ஆகஸ்ட் 9-ஆம் தேதி நடக்கும் இளைஞர் காங்கிரஸ் தொடக்க விழா நிகழ்ச்சியில் கொடுத்துவிடுவதாக முடிவு செய்துள்ளனர்.

கடன்

கடன்

இதற்கு கேரள மாநில காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமசந்திரன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் எம்பிக்கு கார் வாங்க சமூக வலைதளங்கள் மூலம் பணம் திரட்டுவது தவறானது. எம்பிக்களுக்கு வாகனங்களை வாங்குவதற்கென கடன் வழங்கப்படுகிறது.

ஆலோசனை

ஆலோசனை

ரம்யாவின் நிலையில் நான் இருந்தால் நிச்சயம் இதுபோன்ற பணத்தை நான் வாங்க மாட்டேன் என்றார் ராமசந்திரன். இதுகுறித்து ரம்யா கூறுகையில் நான் எப்போதும் கட்சி தலைமையின் ஆலோசனையை ஏற்பேன். என்னை எம்பியாக்கியதே காங்கிரஸ் கட்சிதான்.

இளைஞர் காங்கிரஸ்

இளைஞர் காங்கிரஸ்

இன்று நான் சாதித்தற்கு காரணம் கட்சி தலைமை எனக்கு செய்த உதவிதான். எனது இறுதி மூச்சு இருக்கும் வரை நான் எனது கட்சித் தலைமையின் பேச்சை மதிப்பேன் என்றார். கார் வாங்க நிதி திரட்டுவது குறித்து அவரிடம் கேட்ட போது இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.

 இரண்டாவது பெண் எம்பி

இரண்டாவது பெண் எம்பி

1971-ஆம் ஆண்டு ஆடூர் தொகுதிக்கு பெண் தலித் எம்பி பார்கவி தங்கப்பனுக்கு பிறகு இரண்டாவது முறையாக தலித் இனப் பெண் ரம்யா வெற்றி கண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மார்க்சிஸ்ட் கட்சியின் கோட்டை என சொல்லப்படும் ஆலத்தூர் தொகுதியில் இரு முறை எம்பியான பிகே பிஜூவை தோற்கடித்தார். இந்த முறை கேரளத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே பெண் எம்பி ரம்யா ஆவார். இவருக்கு கார் வாங்கிக் கொடுப்பது தொடர்பாக திருச்சூர் மாவட்ட காங்கிரஸ் மோதல் போக்கு நிலவி வருகிறது.

English summary
Kerala Congress Committee President refuse to buy car for MP Remya Haridas by amount crowding.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X