திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரள அரசியலில் மிக முக்கியமானவர்.. 86 வயதில் காலமானார் கேரளா காங்கிரஸ் (எம்) மணி!

கேரள அரசியலில் மிக முக்கிய தலைவரும், கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவருமான கே.எம் மணி இன்று மாலை காலமானார்.

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள அரசியலில் மிக முக்கிய தலைவரும், கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவருமான கே.எம் மணி இன்று மாலை காலமானார்.

கேரள அரசியலை செதுக்கியவர்களில் முக்கியமான நபர்தான் கருங்கோலக்கால் மணி. இவரை கேரளாவில் மக்கள் கே.எம் மணி, மணி சார் என்ற பல பெயர்களில் அழைப்பார்கள். கோட்டயத்தை சேர்ந்த இவர் முதலில் வக்கீலாக தனது வாழ்க்கையை தொடங்கி பின் அரசியலுக்கு வந்தார்.

Kerala Congress (M) K M Mani passes away at the age of 86

54 வருடம்.. 13 பட்ஜெட்.. ஒரே தொகுதி.. ஒரே எம்எல்ஏ.. 54 வருடம்.. 13 பட்ஜெட்.. ஒரே தொகுதி.. ஒரே எம்எல்ஏ.. "கேரளத்து கருணாநிதி" கே.எம். மணி!

முதலில் காங்கிரஸ் கட்சியில் இருந்த இவர் வேறுபாடுகள் காரணமாக அங்கிருந்து பிரிந்தார். பின் கேரளா காங்கிரஸ் (எம்) கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். ஆனாலும் தேர்தல் நேரத்தில் இவர் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டார்.

திருவிதாங்கூர், கோட்டயம், பத்தனதிட்டா, கொச்சி, இடுக்கி ஆகிய பகுதிகளில் கேரளா காங்கிரஸ் (எம்) வலுவான கட்சியாகும். கேஎம் மணி பல துறைகளுக்கு அமைச்சராக இருந்து இருக்கிறார். அதேபோல் கேரளா சட்டசபையில் கேரளா காங்கிரஸ் (எம்) எப்போதும் குறிப்பிடத்தகுந்த இடங்களை வென்று வந்தது.

கோட்டயம் பலா தொகுதியில் தொடர்ச்சியாக இவர் முதலில் தேர்தலில் இருந்து வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.கடந்த சில நாட்களாக இவர் அரசியல் இருந்து விலகி இருந்தார்.

பெங்களூர் மத்திய தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டி.. ஏன் இந்த தொகுதி.. அட இதுதான் காரணமா?

உடல் நலக்குறைவு காரணமாக பெரிய அளவில் பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை . குரோனிக் அப்ஸ்டிராக்ட்டிவ் புல்ம்நோரி (Chronic Obstructive Pulmonary Disease) என்ற நோய் தாக்குதல் காரணமாக இவருக்கு சுவாச தொற்று ஏற்பட்டது.

இதனால் சிகிச்சை பெற்று வந்தவரின் உடல்நிலை இன்று மோசம் அடைந்தது. இதையடுத்து உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த மணி 86 வயதில் காலமானார். இவரது மறைவு கேரளாவில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இவரது உடலுக்கு தொண்டர்கள் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். தேசிய தலைவர்கள் பலர் இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Kerala Congress (M) K M Mani passes away at the age of 86 due to Chronic Obstructive Pulmonary Disease.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X