திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தப்பு தப்பான வார்த்தை.. தேவையில்லாத போஸ்ட்.. காலங்காத்தாலேயே வாங்கி கட்டிக் கொண்ட காங்.எம்பி. மனைவி

காங்கிரஸ் எம்பி மனைவியின் பேஸ்புக் பதிவு சர்ச்சையானது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: "ஏம்மா எதை கொண்டு வந்து, எதோட சேர்க்கிறே" என்று நெட்டிசன்களிடம் காலங்காத்தாலேயே வாங்கி கட்டி கொண்டார் காங்கிரஸ் எம்பியின் மனைவி!

கேரளாவில் கொஞ்ச நாளாகவே நல்ல மழை பெய்து வருகிறது. இதனால், நிறைய இடங்களில் வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிதறது. கொச்சி மாநகராட்சியில் மிக மோசமான நிலைமை உள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

kerala congress mp wifes controversy facebook share

அந்த வகையில், காங்கிரஸ் எம்பி ஹிபி ஏடன் மனைவியும் தன் கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். அவர் பெயர் அன்னா லிண்டா.. 2 வீடியோக்களை ஒன்றாக சேர்த்து பதிவிட்டார்.

ஒரு வீடியோவில், மீட்புப் படகில் தனது குழந்தையை அன்னா லிண்டா ஏற்றுகிறார். இன்னொரு விடியோவில் அவரது கணவர் ஹிபி ஐஸ்க்ரீமை ருசித்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார். இந்த 2 வீடியோவையும் இணைத்து, "தலையெழுத்தும் பலாத்காரத்தை போன்றதுதான். ஒருவேளை உங்களால் தடுக்க முடியாவிட்டால் அனுபவிக்க வேண்டியதுதான்" என்று பதிவிட்டிருந்தார்.

அதாவது, இவரது வீட்டின் கீழ்த்தளம் முழுக்க வெள்ள நீரால் சூழ்ந்துவிட்டது. இதை சொல்வதற்காகத்தான் இந்த ஃபேஸ்புக் பதிவு.. ஆனால் சொல்ல தெரியாமல் சொல்லி, சம்பந்தமே இல்லாமல் ஐஸ்கிரீம் பதிவை போட்டு, காலங்காத்தால நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக் கொண்டார்.

கப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்!!கப்பென கட்டிப்பிடித்து கொண்ட பெண்.. கொலை வெறி இளைஞன் திணறல்.. கடைசியில் கலகல கிளைமேக்ஸ்!!

"கற்பழிப்பு என்பது விதி அல்ல ஆணாதிக்கம்.. வெள்ளம் சூழுவது இயற்கை அல்ல, சில சமயம் ஆட்சியாளர்கள் சரியில்லை என்றாலும் இது நிகழும்" என்று நெட்டிசன்கள் விளக்கம் தெரிவித்தனர். இவர்களின் கொந்தளிப்பை பார்த்ததும், எம்பி மனைவி அதிர்ந்துவிட்டார்.

"மழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து சொல்லவே அப்படி பதிவிட்டிருந்தேன். ஒரு எம்பியின் மனைவியாக, பொது மக்களின் துயரத்தில் தானும் பங்கேற்கிறேன் என்பதை சொல்லவே அப்படி பதிவிட்டிருந்தேன். ஆனால் எனது கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது, அதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி அந்த பதிவையும் கையோடு நீக்கிவிட்டார்.

English summary
kerala mps wife anna lindas facebook share goes controversy about flood and she removed it
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X