திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"இந்தாங்க.. விக் வெச்சுக்குங்க"... தலைமுடியை தானம் செய்த அபர்ணா.. எழுந்து நின்று பாராட்டும் கேரளா!

புற்றுநோயாளிகளுக்காக தலைமுடியை காணிக்கை தந்துள்ளார் பெண் போலீஸ் ஒருவர்

Google Oneindia Tamil News

Recommended Video

    புற்றுநோயாளிகளுக்கு தன்னுடைய தலைமுடியை காணிக்கையாக தந்து அசத்திய அபர்ணா!-வீடியோ

    திருவனந்தபுரம்: "இந்தாங்க.. விக் வெச்சுக்குங்க" என்று தன்னுடைய தலைமுடியை புற்றுநோயாளிகளுக்கு காணிக்கையாக தந்து அசத்தி உள்ளார் அபர்ணா!
    அபர்ணா லவகுமார்.. வயது 46 ஆகிறது! கேரளாவை சேர்ந்த இவர் ஒரு சீனியர் சிவில் போலீஸ் அதிகாரி ஆவார். திரிசூரில் உள்ள இரிஞ்சலகுடா அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் வேலை பார்க்கிறார்.

    பொதுவாக, கேரள பெண்களுக்கு தலைமுடியே தனி அழகுதான். அந்த வகையில் அபர்ணாவுக்கும் தலைமுடி முழங்கால்வரை நீண்டு தொங்கும். இந்நிலையில், தன்னுடைய தலைமுடியை ஒரு நல்ல காரியத்துக்கு செயலுக்காக பயன்படுத்த முடிவு செய்தார் அபர்ணா.

    Kerala Cop lose her hair for Cancer patients

    அதன்படி புற்றுநோயாளிகளுக்கு இந்த முடியை காணிக்கையாக தந்துள்ளார். புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை காரணமாக தலையில் முடி இருக்காது. அதற்கு பிறகு வளர்வதும் கடினம். அதனால், இவர்களுக்கு விக் தயாரிக்க உதவும் வகையில், அபர்ணா தனது தலைமுடியை முழுசுமாக மழித்து கொள்ள முடிவெடுத்தார். இதன்மூலம் புற்றுநோயாளிகளுக்கு ஓரளவு பலன் கிடைக்கும் என்றும் நம்புகிறார்.

    இதை பற்றி அபர்ணா சொல்லும்போது, "கீமோதெரபி சிகிச்சைக்கு பின் தலைமுடி இல்லாமல், வாடும் புற்றுநோயாளிகளை பார்த்துதான் இப்படி ஒரு உதவி செய்ய முடிவு செய்தேன். புற்றுநோயால் பாதிக்கப்படும் குழந்தைகளை, உடன் படிக்கும் பிள்ளைகள் கிண்டல், கேலி செய்கிறார்கள். இதனால் இந்த பிள்ளைகள் மனசு உடைந்து போகிறார்கள். அவர்களுக்காகத்தான் இந்த முடிவு" என்கிறார்.

    அண்ணனுக்கு இல்லாட்டி பரவாயில்லை.. இவரை நிறுத்துங்க.. வசந்தகுமார் தந்த பிராமிஸ்.. ரூபிக்கு அடித்த லக்அண்ணனுக்கு இல்லாட்டி பரவாயில்லை.. இவரை நிறுத்துங்க.. வசந்தகுமார் தந்த பிராமிஸ்.. ரூபிக்கு அடித்த லக்

    தலைமுடி வளர பெண்கள் படாதபாடு பட்டு வரும் நிலையில், அபர்ணாவின் இந்த முடிவினை பலரும் பாராட்டி வருகிறார்கள். அதாவது கேரள மாநில காவல்துறையை பொறுத்தவரை, ஒருசிலவிதிமுறைகள் உள்ளன. முறையான காரணம் இல்லாமல், தாடி வளர்ப்பது, மொட்டை அடிப்பது இருக்கக்கூடாது. ஆனால் அபர்ணாவின் செயலுக்கு காவல்துறையே அப்ளாஸ் அடிக்கிறது.

    உண்மைதான்.. நீடித்து நிற்கும் அன்புக்கு முன்னால், நிலைக்காத அழகு ஒரு பொருட்டே இல்லை!

    English summary
    Kerala Police officer Aparna Lavakumar donates her hair for cancer patients
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X