திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என் பேத்தியின் ஓவியங்களே அழுத்தங்களை குறைக்கிறது.. இடைவிடாத கொரோனா பற்றி கேரளா அமைச்சர் ஷைலஜா

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்; இடைவிடாத கொரோனா தடுப்பு பணியில் இரவு 11 மணிக்கு மேல் பேசும் பேத்தியின் ஓவியங்கள் அழுத்தங்களை குறைக்கிறது என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்துள்ளார்.

Recommended Video

    America உளவுத்துறை வெளியிட்ட தகவல்.. உண்மையை மறைத்ததா China?

    இந்தியாவில் கொரோனா தடுப்பு பணியில் படுதீவிரமாக ஈடுபட்டிருப்பவர் கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா. இந்தியாவில் கொரோனா தொற்று முதலில் பாதித்த மாநிலம் கேரளாதான். ஆனால் தீவிரமான அடுத்தடுத்த நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு, கொரோனா மரணங்களை கேரளா கட்டுப்படுத்தி இருக்கிறது.

    இந்த பாராட்டுக்குரிய பணியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜாவின் பங்கு மகத்தானது. அமைச்சர் ஷைலஜா ஆசிரியராகப் பணியாற்றி அரசியலுக்கு வந்தவர். உலக ஊடகங்கள் அனைத்து ஷைலஜாவின் பங்களிப்பை குறிப்பிட்டு பாராட்டுகின்றன. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் தமது அன்றாட பணிகள் குறித்து அமைச்சர் ஷைலஜா கூறியதாவது:

    அதிமுகவிற்கு விசுவாசமாக இருங்கள்...2021ல் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த களப்பணியாற்றுங்கள் - ஓபிஎஸ்அதிமுகவிற்கு விசுவாசமாக இருங்கள்...2021ல் ஆட்சிக்கட்டிலில் அமர்த்த களப்பணியாற்றுங்கள் - ஓபிஎஸ்

    காலை 6 மணி முதல் பணிகள்

    காலை 6 மணி முதல் பணிகள்

    அன்றாட பணிகள் காலை 6 மணிக்கு தொடங்கிவிடுகிறது.. அப்போது சுகாதாரத்துறை செயலாளர். சுகாதாரத்துறை இயக்குநர்கள் ஆகியோருடனான ஆலோசனைகளில் ஈடுபடுவோம். இந்த ஆலோசனைகளில் சமூக இடைவெளியை கட்டாயம் பின்பற்றுகிறோம். காலை 7 மணி முதல் ஆன்லைனில் மாவட்ட அதிகாரிகளுடனான ஆலோசனை தொடங்கும். இந்த ஆன்லைன் ஆலோசனை கூட்டம் காலை 10 மணியை கடந்தும் நீடிக்கும்.

    சானிடைசர், முக கவசம்

    சானிடைசர், முக கவசம்

    இந்த பணிகளின் போது கைகளை சானிடைசர் மூலம் சுத்தம் செய்வதில் அக்கறையுடன் இருப்பேன். அதேநேரத்தில் கிளவுஸ் அணிவதில் விருப்பம் இல்லை. வீட்டில் நடைபெறும் ஆலோசனை கூட்டங்களின் போது மூன்று லேயர் கொண்ட மாஸ்க் அணிந்து கொள்வேன்..வெளி இடங்களில் மருத்துவமனைக்கு செல்லும் போது என்95 முக கவசம் அணிவேன்.

    குடும்பத்தினரை சந்தித்து 2 மாதங்கள்

    குடும்பத்தினரை சந்தித்து 2 மாதங்கள்

    குடும்பத்தினரை நேரில் சந்தித்தே 2 மாதங்களாகிவிட்டது. முன்பெல்லாம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கண்ணூருக்கு சென்றுவிடுவேன். ஞாயிற்றுக்கிழமை மாலைதான் திருவனந்தபுரம் திரும்புவேன். பொதுவாக விமானத்தில், ரயிலில் செல்வது பிடிக்காது. காரில் செல்வதுதான் வசதியாக இருக்கும். கார் பயணம் எப்போதும்.. அதேபோல் அலுவலக் காரையும் ஊருக்கு செல்லும்போது பயன்படுத்துவது இல்லை. கணிணி திரைகளைப் பார்த்து கொண்டே இருப்பது பெரிய பிரச்சனையாக இருக்கவே செய்கிறது.

    குடும்பத்தினருடன் இரவு 11 மணிக்கு உரையாடல்

    குடும்பத்தினருடன் இரவு 11 மணிக்கு உரையாடல்

    ஒவ்வொரு நாளும் உறங்கச் சென்றாலும் கூட கொரோனா மரணங்களின் எண்ணிக்கை பெரும் வேதனைக்குரியதாக இருக்கும். இவ்வளவு பெரிய பேராபத்தில் இருந்து இந்த தேசம் எப்படி மீண்டு வருமோ என்பதை நினைத்து அசந்து போய்விடுவேன். அப்படியான தருணங்களில் குடும்பத்தினருடனான வீடியோ கால் உரையாடல்கள் சற்று ஆறுதலைத் தரும். இரவு 10 மணிக்குப் பின்னர்தான் வீட்டுக்குச் செல்வேன். குடும்பத்தினருடன் இரவு 11 மணிக்கு பின்னர்தான் வீடியோ காலில் பேசுவேன். என்னுடைய கணவர், மகன், அவரது மனைவி, 2 வயது பேத்தி ஆகியோர் என்னுடைய வீடியோ காலுக்காக காத்திருப்பார்கள்.

    அழுத்தத்தை குறைக்கும் பேத்தி ஓவியங்கள்

    அழுத்தத்தை குறைக்கும் பேத்தி ஓவியங்கள்

    வீடியோ காலில் என்னுடைய பேத்தி ஓவியங்களைக் காட்டி மகிழ்வார். அவரிடம் பேசிக் கொண்டிருந்தால் என்னுடைய அழுத்தங்கள் குறையும்.. அவருடைய ஓவியங்கள் மூலம் என் சுமைகள் குறைவதாக உணர்கிறேன். அதன்பின்னர் பத்திரிகைகளின் முக்கிய செய்திகள், தலையங்கங்களை படிப்பது உண்டு. யூ டியூப் சேனல்கள் சிலவற்றை பார்த்துவிட்டு உறங்கச் செல்லும் போது அதிகாலை 1 மணியாகிவிடும். கேரளாவின் 14 மாவட்டங்களுக்கும் சென்று சுகாதாரப் பணியாளர்களை நேரில் சந்திக்க வேண்டும். அதேபோல் கிடப்பில் இருக்கும் சுகாதாரத் திட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டும். அப்புறமாக கணவரையும் குடும்பத்தினரையும் சந்திக்க வேண்டும். அப்போதுதான் ஓய்வு எனக்கு கிடைக்கும். இவ்வாறு ஷைலஜா கூறியுள்ளார்.

    English summary
    Kerala Health Minister and Coronavirus Warrior KK Shailaja speaks on her Day Life.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X