திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தலைவர்கள் ரொம்ப "டார்ச்சர்".. என்னால தாங்க முடியலை.. கட்சி ஆபீஸில் தூக்கில் தொங்கிய ஆஷா!

கேரள கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் பெண் தற்கொலை செய்து கொண்டார்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: "எனக்கு தலைவர்கள் எல்லாரும் டார்ச்சர் தந்தார்கள்" என்று லெட்டர் எழுதிவைத்துவிட்டு, மார்க்சிஸ்ட் கட்சி ஆபீசிலேயே பெண் ஒருவர் தூக்கில் தொங்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை தந்துள்ளது.
திருவனந்தபுரம், பாரசாலா அருகே உள்ளது உதயங்குளக்காரா என்ற பகுதி.. இங்கு வசித்து வந்த தம்பதி ஸ்ரீகுமார் - ஆஷா.. இதில் ஆஷா கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்.. 41 வயசாகிறது.

Kerala CPM activist allegedly dies by Suicide note blames two partymen

கடந்த வியாழக்கிழமை கட்சி ஆபீசுக்கு செல்வதாக சொல்லி, வீட்டிலிருந்து கிளம்பி சென்றுள்ளார். ஆனால் அதற்கு பிறகு வீட்டுக்கு வரவே இல்லை.. இதனால் பதறி போன குடும்பத்தினர், அந்த ஆபீசுக்கு சென்று பார்த்தனர்.. அப்போது, கட்சி ஆபீசுக்குள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அலறினர்.

இதையடுத்து தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர்.. அப்போது ஆஷா தற்கொலைக்கு முன்பு எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.. அதில், "உள்ளுர் தலைவர்கள் ராஜன், ஜாய் இவங்க 2 பேரும் என்னை தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்தனர்.. இவர்களிடம் இருந்து என்னால் தப்பிக்கவே முடியவில்லை.. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளாகிவிட்டேன்.. வாழவும் விருப்பமில்லை.

தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்துவிட்டேன்.. இவர்கள் என்னை டார்ச்சர் செய்வது குறித்து கட்சியின் மேல்மட்ட தலைவர்களுக்கு புகார் சொன்னேன்... ஆனால் அவர்களும் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை" என்று எழுதி வைத்திருந்தார். ஆஷாவின் லட்டரை பார்த்ததுமே உறவினர்கள் கொந்தளித்துவிட்டனர்... சடலத்தை வாங்க மாட்டோம் என மறுத்து போராட்டமும் செய்தனர்.. இறுதியில் போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி சடலத்தை ஒப்படைத்தனர்.

நாளை நீட் தேர்வு.. இன்று விடிகாலை தற்கொலை.. புரட்சி வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை: டாக்டர் ராமதாஸ்நாளை நீட் தேர்வு.. இன்று விடிகாலை தற்கொலை.. புரட்சி வெடிக்கும் நாள் தொலைவில் இல்லை: டாக்டர் ராமதாஸ்

இந்த விவகாரத்தை கேரள எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.. இது சம்பந்தமாக அவர்கள் சொல்லும்போது," இந்த மரணத்தில் உரிய நியாயம் வேண்டும்.. நேர்மையான டிஜிபி ஒருவரை வைத்துதான் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்.. மார்க்சிஸ்ட் கட்சிக்குள் பெண்களுக்கு சுத்தமா பாதுகாப்பு என்பதே கிடையாது.. மார்க்சிஸ்ட் கட்சி பெண் தொண்டர்கள் குறி வைத்து மன உளைச்சலுக்கு ஆளாக்கப்படுவது தொடர்ந்து நடக்கிறது.

அந்த பெண்தான் தன்னுடைய பிரச்சனை பற்றி விளக்கமாக சொல்லி புகார் தந்திருக்கிறாரே? ஏன் மேல் மட்ட தலைவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு வருகின்றனர்... ஏற்கனவே கடத்தல் தங்க மங்கை ஸ்வப்னா விவகாரத்தில், ஆளும் கட்சி தலையில் கத்தி தொங்கி வரும் நிலையில், இந்த விவகாரம் கேரளப் பகுதி முழுவதையும் பரபரப்பாக்கியுள்ளது.

English summary
Kerala CPM activist allegedly dies by Suicide note blames two partymen
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X