திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரள காட்டு பகுதியில் இறந்த 5 வயது யானை.. பிரேத பரிசோதனை முடிவுகள் சொல்வது என்ன?

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பாலக்காட்டில் 5 வயது யானையின் தாடையில் முறிவு ஏற்பட்டு இறந்த நிலையில் அது வெடிகுண்டு மறைத்து வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டிருக்கலாம் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

அண்மைக்காலமாக யானைகள் கொடூரமான முறையில் இறக்கும் சம்பவங்கள் நிகழ்ந்தன. அதிலும் கடந்த மாதம் கரு தரித்த யானை ஒன்று இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்த யானை வெடி பொருள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசி பழத்தை உண்டதால் வாய் சிதறி உணவு உண்ண முடியாத கோர நிலைக்கு சென்று கடைசியில் இறந்தது.

இந்த நிலையில் பாலக்காடு மாவட்டம் அட்டப்பட்டியில் வெள்ளிக்கிழமை இரவு ஒரு 5 வயது யானை அகாலி வனப்பகுதிக்குள்பட்ட வீட்டிகுண்டு பகுதியில் இறந்தது.

நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு நடிகர் விஜயின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. நள்ளிரவில் போலீஸார் நடத்திய சோதனையால் பரபரப்பு

பழங்கள்

பழங்கள்

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில் இந்த யானை ஒரு வாரமாக உணவு உட்கொள்ள முடியாமல் இருந்தது. பின்னர் அதன் உடல்நிலை மெலிந்து கடுமையாக பாதிக்கப்பட்டு இறந்தது. இந்த யானை வெடிபொருள் நிரப்பப்பட்ட பழங்கள் அல்லது தேங்காயை சாப்பிட்டிருக்கும். இந்த யானை இறப்பதற்கு மூன்று சாத்தியக்கூறுகள் உள்ளன.

சேம்பிள்கள்

சேம்பிள்கள்

யானையின் பிரேத பரிசோதனை நேற்று காலை நடத்தப்பட்டது. அதில் யானையின் தாடையில் முறிவு ஏற்பட்டிருந்தது. அதன் நாக்கும் கிழிந்திருந்தது. அது நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தது. அதன் வயிற்றில் கட்டி இருந்தது. யானையின் உடலிலிருந்து நிறைய சேம்பிள்களை எடுத்தோம். அவற்றை தடயவியல் துறைக்கு அனுப்பியிருந்தோம்.

சுற்றி திரிந்த யானை

சுற்றி திரிந்த யானை

அந்த யானைக்கு வெளிப்புறத்தில் காயம் ஏதும் இல்லை. அது போல் பட்டாசு வெடித்ததால் அந்த யானையின் வாயில் காயம் ஏற்பட்டதையும் மறுப்பதற்கில்லை. அண்மையில் இந்த யானை மற்ற யானை கூட்டங்களுடன் தென்படவில்லை. எனவே அந்த யானை தமிழக வனப்பகுதியிலிருந்து சுற்றி திரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Recommended Video

    So Sad! மனமுடைந்த அம்மா வாத்து! அடுத்த நிமிடம் உயிர் போனது..எதனால் தெரியுமா?
    வாடிக்கை

    வாடிக்கை

    இந்த யானை இறந்து கிடந்தது குறித்து அந்த காட்டில் உள்ள பழங்குடியினர் தங்களுக்கு தகவல் தெரிவித்தனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த மே மாதம் 27-ஆம் தேதி 15 வயது கருவுற்ற யானை ஒன்று சைலன்ட் பள்ளத்தாக்கில் உணவில் மறைத்து வைக்கப்பட்ட பட்டாசு வெடித்து வாயில் பலத்த காயமடைந்து கிள்ளியாறில் நின்ற நிலையில் இறந்தது குறிப்பிடத்தக்கது. காட்டு பன்றிகள் உள்ளிட்ட காட்டு விலங்குகள் ஊருக்குள் வந்து பயிர்களை சேதம் செய்வதால் உள்ளூர்வாசிகள் இதுபோல் பழங்களில் பட்டாசுகளை நிரப்பி கொடுப்பது வாடிக்கையாகி அது அந்த விலங்கின் உயிருக்கே உலை வைக்கிறது.

    English summary
    Kerala elephant dies of injuries and the forest officials says it may have eaten cracker hidden fruit.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X