திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மதம் பிடிக்கவில்லை.. யாரையும் தாக்கவில்லை.. உயிர் வேதனையிலும் அமைதி காத்த யானை.. ஏன்? பின்னணி!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் யானை தாக்கப்பட்ட போது அந்த யானை உயிர் வேதனையிலும் மதம் பிடிக்காமல் இருந்தது எப்படி, அது அமைதி காத்தது எப்படி என்று விவரம் வெளியாகி உள்ளது.

Recommended Video

    கேரளா கர்ப்பிணி யானையை கொன்றவர்களுக்கு தண்டனை

    கேரளாவில் கர்ப்பிணி யானை ஒன்று கொலை செய்யப்பட்டது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த யானை கொல்லப்பட்டது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இன்னும் இருவர் தேடப்பட்டு வருகிறார்கள்.

    கேரளாவில் கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.அங்கு பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் காட்டுப்பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது .

    கேரளா யானை கொலை.. விசாரணையில் பெரும் திருப்பம்.. முதல் நபர் அதிரடி கைது.. பரபரப்பு பின்னணி! கேரளா யானை கொலை.. விசாரணையில் பெரும் திருப்பம்.. முதல் நபர் அதிரடி கைது.. பரபரப்பு பின்னணி!

    வெடி மருந்து

    வெடி மருந்து

    இந்த யானைக்கு காலை நேரத்தில் இப்படி வெடி மருந்து கலந்த பழத்தை கொடுத்து இருக்கிறார்கள். பழத்தை சாப்பிட்ட சில நொடியில் அதன் வாய் வெடித்து இருக்கிறது. அதன்பின் வெடித்த வாயோடு, பெரும் வேதனையோடு அந்த யானை அங்கு இருக்கும் தெருக்களை சுற்றி வந்து இருக்கிறது. அந்த யானை யாரையும் தொந்தரவு செய்யவில்லை. யாரையும் தாக்கவில்லை.

    அமைதி காத்தது

    அமைதி காத்தது

    அமைதியாக சாலையில் அந்த யானை கடந்து சென்று இருக்கிறது. பொதுவாக சாதாரண வெடி சத்தத்திற்கே யானைகள் மதம் பிடிக்கும். லேசாக பெட்ரோல் குண்டுகள் தூரத்தில் வெடித்தால் கூட யானைக்கு மதம் பிடிக்கும். ஆனால் இந்த யானை உயிர் வேதனையிலும் கூட அப்படி எதுவும் செய்யவில்லை. உயிருக்கு போராடிய போது கூட அந்த யானை அமைதியாக இருந்து இருக்கிறது.

    என்ன விளக்கம்

    என்ன விளக்கம்

    இந்த நிலையில் இந்த யானையின் அமைதி குறித்து கேரளாவை சேர்ந்த வனத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். அந்த யானை யாரையும் தாக்கவில்லை. ஒரு மனிதர்களை கூட அந்த யானை தொந்தரவு செய்யவில்லை. ஆனால் அந்த பகுதியில் இருக்கும் தெருக்களில் வலி மிகுதியால் வேகமாக ஓடி இருக்கிறது. அப்போதும் கூட கடைகள் எதிலும் மோதவில்லை.

    யாரையும் தாக்கவில்லை

    யாரையும் தாக்கவில்லை

    ஒரு வீட்டை கூட அந்த யானை தாக்கவில்லை. அந்த யானை முழுக்க முழுக்க தூய்மையின் உருவமாக இருந்துள்ளது. யாருக்கும் அது தீங்கு நினைக்கவில்லை. இப்படிப்பட்ட யானையைத் தான் அவர்கள் கொன்று இருக்கிறார்கள். யானை வெடி குண்டு தாக்குதலுக்கு பின் நீரை தேடி ஓடி இருக்கிறது. வயிறு எரிச்சல் காரணமாக நீரை தேடி ஓடி இருக்கிறது. அதற்கு தான் இறக்க போகிறோம் என்று தெரிந்துள்ளது.

    குட்டி யானை

    குட்டி யானை

    வயிற்றில் குட்டி யானை இருந்ததால் அந்த யானை சாந்தமாக இருந்துள்ளது. அதற்கு கோபம் வரவில்லை. சாவதற்கு முன் அமைதியாக சாக வேண்டும் என்று நீரை நோக்கி சென்றுள்ளது. வயிறில் ஏற்பட்ட எரிச்சலில் இருந்து எப்படியாவது தப்பிக்க வேண்டும் என்று அந்த யானை நீர் பகுதிக்கு சென்றுள்ளது. அதன் வேதனையை நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதை விளக்குவது கஷ்டம் என்று அவர்கள் கூறியுள்ளனர் .

    English summary
    Kerala: Forest Department explains about the calmness of the elephant even after get attacked with the explosives.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X