திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா யானை கொலை.. விசாரணையில் பெரும் திருப்பம்.. முதல் நபர் அதிரடி கைது.. பரபரப்பு பின்னணி!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் யானைக்கு வெடிமருந்து கொடுத்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் நபர் கைது செய்யப்பட்டு உள்ளது, மிகப்பெரிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    கேரளா யானை கொல்லப்பட்ட விவகாரம்....வேறுமாதிரி கோணத்தில் பேசும் பாஜக தலைவர்கள்

    கேரளாவில் கர்ப்பிணி யானை கொலை செய்யப்பட்டது இந்தியா முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு கடந்த 27ம் தேதி கர்ப்பிணி யானை ஒன்று வெடி வைத்து கொலை செய்யப்பட்டது. கேரளாவில் மன்னார்காடு பகுதியில் இந்த சம்பவம் நடந்தது.

    அங்கு பாலக்காடு மாவட்டத்திற்கு கீழே வரும் காட்டுப்பகுதியில் உள்ள வெள்ளியார் நதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது . ஊருக்கு வந்த யானை வெடி வைக்கப்பட்ட அன்னாசியை சாப்பிட்டதில் பலியானது கண்டுபிடிக்கப்பட்டது.

    நொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது? நொறுங்கியது இதயம்.. மக்களை உலுக்கி சென்ற யானை.. அன்னாசி பழத்தில் வெடியா.. என்னதான் நடந்தது?

    பிரேத பரிசோதனை முடிவு

    பிரேத பரிசோதனை முடிவு

    இது தொடர்பாக தீவிரமான விசாரணை நடந்து வருகிறது. இந்த யானை வெடியை உண்டு அது வாயில் வெடித்த காரணத்தால் பலியாகி உள்ளது. நீருக்குள் நின்றபடி அந்த யானை பலியானது. இந்த கொடூரமான சம்பவம் வீடியோவாக வெளியானது. யானையின் வாய், தொண்டை எல்லாம் மோசமாக கிழிந்து இருந்தது பிரேத பரிசோதனையின் முடிவில் கண்டுபிடிக்கப்பட்டது.

    தனிப்படை

    தனிப்படை

    இந்த நிலையில் கேரளாவில் யானை வெடிமருந்து கொலை செய்யப்பட்ட வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. கேரளாவின் வனத்துறை சார்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக வயல்களை காக்க இப்படி வெடிகள் சுற்றப்பட்ட அன்னாசி பொறிகளை வைப்பார்கள். வன விலங்குகள் வயலுக்குள் வந்து செயல் செய்ய கூடாது என்று இப்படி வைப்பார்கள்.

    தடை உள்ளது

    தடை உள்ளது

    ஆனால் இதற்கு கேரளாவில் தடை உள்ளது. இது குற்றச்செயல் ஆகும். இதற்கு 7 வருட சிறை தண்டனை வரை வழங்கப்படும். இப்படி யானை கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்த விசாரணையை தீவிரமாக நடத்தும்படி நேற்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டு இருந்தார். இதில் மூன்று பேர் மேல் சந்தேகம் உள்ளது என்று பினராயி விஜயன் குற்றஞ்சாட்டி இருந்தார்.

    முதல் கைது

    முதல் கைது

    இந்த நிலையில் யானை வெடிமருந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முதல் நபர் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் பெயர் வில்சன். மிகப்பெரிய திருப்பமாக இது பார்க்கப்படுகிறது. இவர் விவசாய பணிகளை செய்து வருகிறார். இவர் எப்படி இந்த பணிகளை செய்தார், ஏன் இந்த கொலையை செய்தார் என்று விவரங்கள் வெளியாகவில்லை. வெள்ளியார் நதி இருக்கும் பகுதியில் இவர் வசித்து வருகிறார். இங்குதான் அந்த யானை கொலை செய்யப்பட்டது.

    இன்னும் இருவர்

    இன்னும் இருவர்

    தற்போது இவரை போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். இவருடன் இன்னும் இரண்டு பேர் இந்த குற்றத்தை செய்து இருக்கிறார்கள். தற்போது அந்த இரண்டு பேரை தேடும் பணி நடந்து வருகிறது. இவர்கள் இரண்டு பேர் குறித்தும் கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை செய்யப்பட்டு வருகிறது. தலைமறைவாகி இருக்கும் அவர்கள் இருவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

    English summary
    The Kerala Forest Department has found the culprits and recorded the first arrest in the elephant murder case in Palakkad.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X