திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திடீர் திருப்பம்.. கேரளா தங்ககடத்தல் வழக்கில்.. ரபின்ஸ் ஹமீதுவை 7 நாள் விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி

கேரளா தங்கம் கடத்தல்காரர் ரபின்ஸ ஹமீதுவுக்கு 7 நாள் காவல் வழங்கப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள தங்கக் கடத்தல் வழக்கில் கைதான ரபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது... நவம்வர் 3-ம் தேதி வரை ராபின்ஸ ஹமீதுவை விசாரிக்க இந்த அனுமதியை கொச்சி நீதிமன்றம் அளித்து உத்தரவிட்டுள்ளது.

கேரள தங்கம் கடத்தல் வழக்கில் சொப்னா, சந்தீப் நாயர், சரித்குமார் ஆகியோர் கைதாகி உள்ளனர். அவர்களிடம் சுங்க இலாகா விசாரணையும் நடத்தியது.. அப்போது, திருச்சூரை சேர்ந்த பைசல் பரீத், மூவாற்றுப்புழாவை சேர்ந்த ரபின்ஸ் ஹமீது ஆகியோருக்கும் இதில் முக்கிய பங்கு இருப்பது தெரியவந்தது.

Kerala Gold smuggler Rabins remanded for seven days

அதாவது இவர்கள் 2 பேரும் தான் துபாயில் இருந்து தூதரக பார்சலில் தங்கத்தை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. மேலும் ரமீஸ் என்பவருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவரும், அவரையும் போலீசார் கைது செய்தனர்.

ரமீஸிடம் விசாரணை நடத்தியபோதுதான், இந்த கடத்தலுக்கு தீவிரவாதிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது... இதற்குபிறகுதான் என்ஐஏ இதில் தலையிட்டு, விசாரணையை கையில் எடுத்தது. மேலும், கைதாகி உள்ள அனைவர் மீதும் உபா சட்டமும் பாய்ந்தது.

பேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்பேஸ்புக் பதிவு சர்ச்சை எதிரொலி.. இயக்குநர் பதவியிலிருந்து விலகினார் அங்கி தாஸ்

இதில், பைசல் பரீத், ரபின்ஸ் ஹமீது 2 பேரும் துபாயில் இருந்ததால் இன்டர்போல் உதவியுடன் அவர்களை கைது செய்ய என்ஐஏ முடிவு செய்தது.. அதற்காக என்ஐஏ அதிகாரிகள் துபாய் சென்று, பைசல் பரீதை கைதும் செய்ததாக செய்திகள் வெளிவந்தன.

தற்போது, ரபின்ஸ் ஹமீதையும் என்ஐஏ கைது செய்துள்ளது... நேற்று கொச்சிக்கு அவரை அதிகாரிகள் அழைத்து வந்திருந்தனர்.. விசாரணையும் நடந்தது.. இந்நிலையில் ரபின்ஸ ஹமீதுவை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க என்ஐஏவுக்கு கொச்சி கோர்ட் அனுமதி தந்துள்து.. நவம்பர் 3-ம் தேதி வரை ராபின்ஸ் ஹமீதுவை விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

English summary
Kerala Gold smuggler Rabins remanded for seven days
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X