திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

kerala gold smuggling case: ஸ்வப்னாவால் சிக்கல்.. சிபிஐ விசாரணை கோரி பிரதமருக்கு பினராயி கடிதம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் பெரும் புயலை கிளப்பிய ஸ்வப்னா தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக சிக்கலில் சிக்கியுள்ள முதல்வர் பினராயி விஜயன், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் எழுதியுள்ள கடிதத்தில் "ஜூலை 5 ம் தேதி சுங்க அதிகாரிகளால் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் சுமார் 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பதை உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். பெரிய அளவிலான தங்கத்தை கடத்த முயன்ற சம்பத்தில் தூதரக அதிகாரிகள் தொடர்பில் இருந்தது இந்த விஷயத்தை மேலும் தீவிரமாக்குகிறது.

"இது நாட்டின் பொருளாதாரத்தை பாதிக்கும் அளவுக்கு கடுமையான தாக்கத்தை இந்த விவகாரம் ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கு பல்வேறு கோணங்களில் முழு விசாரணை நடத்தப்படுகிறது.

தங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி?தங்கக் கடத்தல் ஸ்வப்னா பத்தாம் வகுப்பு கூட படிக்கலையாமே அப்புறம் எப்படி அதிகாரி பதவி?

மத்திய அரசு விசாரணை

மத்திய அரசு விசாரணை

இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மத்திய புலனாய்வு அமைப்புகளும் திறமையான மற்றும் ஒருங்கிணைந்த விசாரணையை மேற்கொள்வது காலத்தின் தேவையாக உள்ளது.. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ள அனைத்து உண்மைகளையும் கண்டறிய வேண்டும்.

பினராயி உறுதி

பினராயி உறுதி

இந்த வழக்கின் விசாரணையில் சம்பந்தப்பட்ட மத்திய அரசின் விசாரணை அமைப்புகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், முழு ஒத்துழைப்பும் கேரள மாநில அரசு வழங்கும் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன்" இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.

தங்க கடத்தல்

தங்க கடத்தல்

திருவனந்தபுரத்தில் உள்ள அமீரகத்தின் தூதரகத்துக்கு உணவுப் பொருட்கள் என்று சில பார்சல் வருவது விமானம் வழியாக வருவது வழக்கமாகும். மற்றோரு நாட்டின் தூதரகத்துக்கு வரும் பார்சல்களை சுங்கத்துறையினர் வழக்கமாக சோதனையிடமாட்டார்கள்.. இந்த பார்சலை ஸரித் என்பவர் எடுத்து சென்று வந்துள்ளார். ஆனால், இப்படி வரும் பார்சல்களில் தங்கம் கடத்துவதாக புகார் எழுந்தது.

30 கிலோ தங்கம் கடத்தல்

30 கிலோ தங்கம் கடத்தல்

இதை தொடர்ந்து , சுங்கத்துறை அதிகாரிகள் வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் பார்சல்களை சோதனை செய்ய சிறப்பு அனுமதி வாங்கினர். அதன்பின்னர் திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு வந்த பார்சலை சோதனையிட்ட போது, ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் இருந்ததை கண்டுபிடித்தனர். இந்த கடத்தலில் கேரள தகவல் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ்க்கு தொடர்பு இருப்பது உறுதியானது. இவர் அமீரக நாட்டு தூதரகத்தில் பணியாற்றியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

தங்க கடத்தல்

தங்க கடத்தல்

இதையடுத்து, ஸ்வப்னா சுரேஷ் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி தீவிர விசாரணையில் இறங்கினர். இதனிடையே முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம். சிவசங்கர்தான் கேரள தகவல் தொடர்பு துறைக்கும் செயலர். இதனால்,அவரிடமும் போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்தனர்.

ரமேஷ் சென்னிதலா

ரமேஷ் சென்னிதலா

இதற்கிடையே கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதலா, முதல்வர் அலுவலகத்துக்கும் தங்க கடத்தலுக்கும் தொடர்பு உள்ளது என்றும் தலைமைச் செயலகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் தங்க கடத்தலுக்கு துணையாக உள்ளதாக குற்றம் சாட்டினார். தங்க கடத்தலில் சிக்கிய ஊழியரை காப்பாற்ற முயற்சிப்பதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அலுவலகம் முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட நடத்த வேண்டும் என்று கடிதம் எழுதியுள்ளார்.

Recommended Video

    Gold Smuggling | Kerala அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள் |Swapna Suresh |Saritha Nair
    மோடிக்கு கடிதம்

    மோடிக்கு கடிதம்

    இதற்கிடையே, தங்க கடத்தல் விவகாரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனின் முதன்மை செயலர் எம்.சிவசங்கரின் பதவி பறிக்கப்பட்டிருக்கிறது இவருக்கு பதிலாக மீர் முகமது நியமிக்கப்பட்டுள்ளார். எனினும், சிவசங்கர் ஐ.டி துறை செயலராக தொடர்ந்து பணியாற்றுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தான் தங்க கடத்தல் வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி முதல்வர் பினராயி விஜயன் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

    English summary
    kerala gold smuggling case: Chief Minister Pinarayi Vijayan on Wednesday writes to PM Modi, seeks effective probe by central agencies
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X