திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கோல்டன் கேர்ள்".. பாஜகவுக்கு நெருக்கமான ரிப்போர்ட்டரின் ஷாக் வாக்குமூலம்.. வசமாக சிக்கும் ஸ்வப்னா

தங்க கடத்தல் தொடர்பாக டிவியின் சீனியர் ரிப்போர்ட்டரிடம் விசாரணை நடந்தது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: "ஆமா.. ஸ்வப்னாவுடன் தொடர்பில் இருந்தேன்.. போனில் பேசினேன்.. ஏன் தெரியுமா?" என்று பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கும், டிவி சீனியர் ரிப்போர்ட்டர் அனில் நம்பியார் போலீசில் வாக்குமூலம் தந்துள்ளார்.. இதனால் "கோல்ட் கேர்ள் ஸ்வப்னா" மறுபடியும் வசமாக சிக்க போகிறார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது!

அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்துக்கு தங்கம் கடத்தி வந்த வழக்கு தொடர்பாக ஸ்வப்னா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 Gold Smuggling customs question TV Journalist BJP denies ties with channel

இது சம்பந்தமாக தேசிய பாதுகாப்பு முகமை, அமலாக்கத்துறை மற்றும் சுங்க இலாகா துறை என மூன்று துறையினர் இந்த வழக்கை துருவி துருவி விசாரித்து வருகிறார்கள்... தினம் ஒரு ஷாக் தகவல் இந்த கடத்தல் சம்பந்தமாக வெளிவருகிறது.. அப்போதெல்லாம் ஸ்வப்னாவின் போலி முகத்திரையும் கிழிந்தபடியே வருகிறது.

கேரள தங்க கடத்தல் வழக்கில் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளராக இருந்த ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு நேரடியாக தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இல்லைதான்.. ஆனால், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களுடனான நெருக்கம் காரணமாக வழக்கில் வசமாக சிக்கிக் கொண்டுள்ளார் சிவசங்கரன்.

ஸ்வப்னாவுக்கு எதுக்காக இவ்வளவு பெரிய பொறுப்பு? அந்த பொறுப்பை வழங்கியதில் சிவசங்கரனுக்கு நிறைய பங்கு இருக்கிறதாம்.. அது மட்டுமில்லை.. ஸ்வப்னா வீட்டுக்கு போய் வரும் அளவுக்கு நெருக்கம் வைத்திருந்தார் என்றும் சொல்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஸ்வப்னாவுக்கு தலைமை செயலகம் பக்கத்திலேயே ஒரு வீட்டை தொழிலதிபர் மூலம் ஏற்பாடு செய்து தந்தாராம் சிவசங்கரன்.. சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய 9 மணி நேர விசாரணையில் இவ்வளவையும் கக்கி இருக்கிறார்.

ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.... உடல் நலம் பாதிப்பு... இன்று ராஜினாமா செய்கிறாரா? ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே.... உடல் நலம் பாதிப்பு... இன்று ராஜினாமா செய்கிறாரா?

ஆனால், இந்த ஸ்வப்னா தலைமறைவாக இருந்போது, ஒரு ஆடியோவை வெளியிட்டிருந்தார்.. அதில், தான் ஒரு வாடகை வீட்டில்தான் வசித்து வருவதாக கதறி இருந்தார்.. ஆக. ஸ்வப்னா சொன்னதில் இதுவும் பொய் என நிரூபணமாகிவிட்டது.

இந்த நிலையிலை இன்னொரு விஷயத்திலும் ஸ்வப்னா சிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.. ஸ்வப்னாவிடம் தொலைபேசி தொடர்பில் இருந்தவர் அனில் நம்பியார்.. இவர் "ஜனம்" டிவியின் சீனியர் ரிப்போர்ட்டர்.. எப்பவுமே ஸ்வப்னாவிடம் போனில் இவர் பேசி கொண்டே இருந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதுமட்டுமல்ல, தங்கம் கடத்திய அன்றுகூட ஸ்வப்னாவிடம் இவர் போனில் பேசியிருக்கிறார். 2 பேரும் சுமார் 4 நிமிடங்கள் போனில் பேசி உள்ளனர்.. இவரிடம் பேசிய பிறகுதான், சுரேஷுக்கு அணிலுக்கு போன் செய்தாராம் ஸ்வப்னா.

இந்த அனில் நம்பியார், பாஜகவிற்கு நெருக்கமாக உள்ளவராம்.. இது தொடர்பாக கேரள பாஜக தலைவர் விளக்கம் தந்தாலும், அனில் மீதான சந்தேக பார்வை அதிகமாகவே விழுந்தது. அதனால், அனில் நம்பியாரிடம் தனியாக விசாரணை நடத்த முடிவு செய்த அதிகாரிகள், அவரை கொச்சியில் உள்ள சுங்க இலாகா ஆபீசுக்கு அழைத்து விசாரித்தனர்.

தங்க கடத்தல் விவகாரம் குறித்து ஸ்வப்னாவின் கருத்தை கேட்க அவரிடம் பேசியதாக அனில் நம்பியார் ஒப்புக் கொண்டார்.. ஆனால், ஸ்வப்னாவை ஓட்டலுக்கு சென்றெல்லாம் சந்தித்து பேசவில்லை என்றும் சொல்லி உள்ளார். இந்த ரிப்போர்ட்டர் விஷயத்திலும் ஸ்வப்னா வசமாக சிக்க போகிறார் என்றே தெரிகிறது!

English summary
Gold Smuggling customs question TV Journalist BJP denies ties with channel
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X