திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளா தங்க கடத்தல் வழக்கு: பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் அதிரடி கைது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளா தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் சூறாவளி புயலாக வீசிக் கொண்டிருக்கிறது தங்கக் கடத்தல் வழக்கு. இந்த வழக்கில் சிக்கிய முக்கிய நபரான ஸ்வப்னா சுரேஷுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் சிவசங்கர் என்பது குற்றச்சாட்டு.

Kerala Gold smuggling Case: ED arrests Sivasankar

கேரளா முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் முதன்மை செயலாளர் சிவசங்கர். இந்த கடத்தல் தொடர்பாக என்.ஐ.ஏ. அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் ஏற்கனவே சிவசங்கரிடம் விசாரணை நடத்தினர்.

இதனிடையே தங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறையினர் தம்மை கைது செய்யாமல் இருக்க கேரளா உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்திருந்தார் சிவசங்கர். இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

சிவசங்கருக்கு ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை, சுங்கத்துறை அதிகாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சிவசங்கரின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து திருவனந்தபுரம் ஆயுர்வேத மையத்தில் சிவசங்கரை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
சிவசங்கர் கைது செய்யப்பட்டிருப்பதால் கேரளா முதல்வர் பினராயி விஜயனுக்கும் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

English summary
Enforcement Directorate officials taken Custory of IAS Officer Sivasankar in Kerala Gold smuggling Case.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X