திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரள தங்க கடத்தல் வழக்கு.. பாஜகவிற்கு நெருக்கமானவர்.. என்ஐஏ விசாரணை வலையில் மூத்த செய்தியாளர்!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள தங்க கடத்தல் வழக்கில் புதிய திருப்பமாக அங்கு பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் ஜனம் தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பு தலைமை செய்தியாளர் அணில் நம்பியார் விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளார்.

கேரளாவை உலுக்கிய தங்க கடத்தல் வழக்கில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். கேரளாவில் இருக்கும் யுஏஇ தூதரகத்தை பயன்படுத்தி 30 கிலோ தங்கம் கடத்தியதாக முன்னாள் அரசு அதிகாரி ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.

Kerala gold smuggling case: NIA questioned a Kerala-based television news anchor

ஸ்வப்னா சுரேஷ் தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகிறார். இந்த வழக்கில் நாளுக்கு புதிய தகவல்கள், விவரங்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.

இந்த வழக்கில் கேரளாவின் சிபிஎம் அரசுக்கு எதிராகவும் முதல்வர் பினராயி விஜயனுக்கு கடுமையான புகார்களை பாஜக மற்றும் காங்கிரஸ் வைத்து வருகிறது. ஸ்வப்னா சுரேஷ் முதல்வர் அலுவலகத்தில் வேலை பார்த்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் புதிய திருப்பமாக கேரளாவில் பாஜகவிற்கு நெருக்கமாக இருக்கும் ஜனம் தொலைக்காட்சியின் ஒருங்கிணைப்பு தலைமை செய்தியாளர் அணில் நம்பியார் விசாரணைக்கு உள்ளாக்கி உள்ளார்.

என்ஐஏ அதிகாரிகள் நேற்று அணிலை விசாரணைக்கு உட்படுத்தினார்கள். இவருக்கு ஸ்வப்னா சுரேஷுக்கு நெருங்கிய தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. ஏனென்றால் ஸ்வப்னா சுரேஷ் உடன் அணில் இந்த வருட தொடக்கத்தில் இருந்து பலமுறை போன் மூலம் பேசி இருக்கிறார்.

சரியாக 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட ஜூலை 5ம் தேதி ஸ்வப்னா சுரேஷுக்கு அணில் போன் செய்து இருக்கிறார். சுமார் 4 நிமிடங்கள் இவர்கள் போனில் பேசி உள்ளனர். அதன்பின் மீண்டும் அதே நாள் ஸ்வப்னா சுரேஷுக்கு அணிலுக்கு கால் செய்து இருக்கிறார். இந்த போன் கால் சுமார் 1.43 நிமிடம் நீடித்து இருக்கிறது.

புல்வாமா தாக்குதல்.. தீவிரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான்தான் பாதுகாக்கிறது.. இந்தியா கடும் கண்டனம்! புல்வாமா தாக்குதல்.. தீவிரவாதி மசூத் அசாரை பாகிஸ்தான்தான் பாதுகாக்கிறது.. இந்தியா கடும் கண்டனம்!

இதற்கு பின் ஸ்வப்னா சுரேஷ், தனது கடத்தல் கொள்ளைக்கு துணையாக இருந்த சரித் உடன் போனில் பேசி உள்ளார். அதன்பின் ஸ்வப்னா சுரேஷ் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது. இதன் காரணமாகவே தற்போது அணிலிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

Recommended Video

    COVID வந்தால் Rs.50,000 Cashback! Keralaவில் வினோத விளம்பரம்

    இந்த அணில் பாஜகவிற்கு நெருக்கமான ஜனம் தொலைக்காட்சியில் மூத்த பொறுப்பில் இருப்பதால் பாஜகவிற்கு இதனால் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக எழுந்த புகாருக்கு கேரள பாஜக தலைவர் கே சுரேஷ்ந்திரன் பதில் அளித்துள்ளார். அதில், ஜனம் தொலைக்காட்சி பாஜகவிற்கு சொந்தமானது கிடையாது. அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை, என்று கூறியுள்ளார்.

    English summary
    Kerala gold smuggling case: NIA questioned a Kerala-based television news anchor who allegedly closed to BJP.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X