திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

வாட்டசாட்ட உடம்பு.. ரிச் லுக்கு.. கூடவே பிறந்த கெத்து.. "வெட்டிருவேன்", ஸ்வப்னாவின் திகில் பக்கங்கள்

கேரள ஸ்வப்னாவை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: வாட்டசாட்டமான உடம்பு, ரிச் லுக், கெத்து தோரணையுடன் காணப்படும் இந்த ஸ்வப்னா வெறும் பத்தாம் கிளாஸ்தானாம்.. அது மட்டுமில்லை.. சொந்த தம்பியையே "வெட்டிருவேன்" என்று மிரட்டல் விடுத்தவராம்.. துபாயில் இவர் செய்த அக்கப்போர்கள் குறித்த பகீர் தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

Recommended Video

    Gold Smuggling | Kerala அரசியலை ஆட்டம் காண வைத்த பெண்கள் |Swapna Suresh |Saritha Nair

    3 நாளாக ஸ்வப்னா நியூஸ்தான் ஹாட்டாக போய் கொண்டிருக்கிறது.. கேரள மாநில அரசே கதி கலங்கி போயுள்ளது இந்த பெண்ணின் தங்க கடத்தல் விவகாரத்தால்!

     kerala swapna suresh: kerala gold smuggling case swapna suresh absconding

    ஸ்வப்னாவுக்கு வயசு 36 ஆகிறது.. அதற்குள் கடத்தல், புகார், கேஸ், அடிதடி, என எல்லா குற்றங்களையும் செய்திருப்பார் போல தெரிகிறது.. வெறும் தங்க கடத்தல் என்று நினைத்துதான் போலீசார் இந்த விசாரணையை ஆரம்பித்தனர். ஆனால், நடிகை பூர்ணாவை கடத்திய கும்பலுடன் ஸ்வப்னாவுக்கு தொடர்பு இருந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியவுடன் விவகாரம் சூடுபிடித்தது.

    அடுத்ததாக ஸ்வப்னா 10ம் கிளாஸ்கூட முடிக்கவில்லை என்று அவரது தம்பி பிரைட் சுரேஷ் கூறுகிறார்.. இவர் இப்போது அரிக்காவில் இருக்கிறார்.. ஸ்வப்னா விஷயம் வெளியே தெரிந்ததுமே செய்தியாளர்களிடம் பேட்டி தந்துள்ளார்.. அதில், " நாங்க மொத்தம் 3 பேர்.. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் குடும்பமாகத்தான் வசித்தோம். 17 வயசுல நான் அமெரிக்காவுக்கு வந்துட்டேன்.. சில வருஷத்துக்கு முன்னாடி, வீட்டுக்கு போயிருந்தப்போ, பொய் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன், வெட்டிடுவேன்னு என்னை ஸ்வப்னா மிரட்டினாள்.

    அதுக்கு காரணம் நான் சொத்தில் பங்கு கேட்டுடுவேன்னு அவ நினைச்சாள்.. உயிருக்கு பயந்துட்டு நானும் அமெரிக்காவுக்கு வந்துட்டேன். ஸ்வப்னா 10வது கூட முடிக்கல.. அவ எப்படி அந்த வேலைக்கு சேர்ந்தார்ன்னுதான் தெரியல? என்றார். இவர் இப்படி கொளுத்திப்போட, 10வதுகூட படிக்காத பொண்ணுக்கு எப்படி அரசு வேலை? என்று அகேரளா அரசியலை கிடுக்கிப்பிடி கேள்வி கேட்டு வருகிறார்கள்.,

    இன்னொரு விஷயமும் சொல்கிறார்கள்.. ஸ்வப்னா இதற்கு முன்பு துபாய் உட்பட பல இடங்களில், பல துறைகளில் வேலை பார்த்து வந்துள்ளார்.. ஆனால் எல்லா இடங்களிலும் ஸ்வப்னா இருந்தாலே ஏகப்பட்ட சர்ச்சைதான்.. பரபரப்புதான்!! எந்த ஆண் நண்பரையோ, வேலை பார்ப்பவரையோ ஸ்வப்னாவுக்கு பிடிக்காவிட்டால, உடனே "பாலியல் தொல்லை தந்தார், கையை பிடிச்சு இழுத்தார்" என்று பொய் புகார் தந்து சிக்க வைத்துவிடுவாராம்.

    தங்க கடத்தல் வழக்கு.. தமிழகத்தில் பதுங்கியுள்ளாரா ஸ்வப்னா சுரேஷ்?.. முன்ஜாமீனுக்கும் பக்கா பிளானாம்!தங்க கடத்தல் வழக்கு.. தமிழகத்தில் பதுங்கியுள்ளாரா ஸ்வப்னா சுரேஷ்?.. முன்ஜாமீனுக்கும் பக்கா பிளானாம்!

    போலீசாரும் பெண் சொன்னால் உண்மையாகதான் இருக்கும் என்று நம்பி அந்த நபரை விசாரிக்கும்போதுதான், ஸ்வப்னாவின் புருடுடா தெரியவந்திருக்கிறது.. பலமுறை ஸ்வப்னா மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் வார்ன் செய்து விட்டுள்ளனர். இப்படி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர், ஸ்வப்னா தன் மீது போலி பாலியல் புகாரை அளித்ததாக கேரள ஐகோர்ட்டில் வழக்கே தொடுத்திருக்கிறாராம். அதுதொடர்பாகவும் போலீஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆனால் இந்த கோர்ட், கேஸ்கள் அனைத்தையும் மறைத்துதான் இவர் அந்த உயர் பதவியில் சேர்ந்ததாக சொல்கிறார்கள்.. அதனால் இது ஒருபக்கம் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இவரும், இவருடன் சேர்ந்து தங்கம் கடத்திய சரித்குமாரும் ரூ.100 கோடி மதிப்புள்ள தங்கத்தை கடத்தி பல கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..

    ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் கேரள அரசு நல்லுறவை பேணி வருவதால், தூதரக அலுவலகத்தில் உள்ளூர் மட்ட அளவிலான ஊழியர்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தனர்.. அந்த வகையில்தான் அதிகாரத்துவம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் ஸ்வப்னா சுரேஷ் மெல்ல நகர்ந்துள்ளார்.. இதைவிட ஆச்சரியம், தன்னை வெளிநாட்டு தூதரக அதிகாரியாகவும் திடீரென சொல்லி கொள்வாராம்.

    2017-ல் ஷார்ஜா ஆட்சியாளர் கேரளாவுக்கு 4 நாள் பயணம் வந்திருந்தார்.. அப்போது, அந்த விஐபிக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு பல அதிகாரப்பூர்வ விழாக்களில் ஸ்வப்னா கலந்து கொண்டு ஜொலித்துள்ளார். இப்படி நாளுக்கு நாள் ஸ்வப்னா பற்றிய பகீர்கள் வெளியாகி கொண்டே வருகிறது.. ஆனால் ஸ்வப்னா தான் எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை!

    English summary
    kerala swapna suresh: kerala gold smuggling case swapna suresh absconding
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X