திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிப்பு.. மாஸ்க் கட்டாயம், பொதுக்கூட்டங்களுக்கு தடை

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இந்தியாவில் முதல் மாநிலமாக கேரளாவில் லாக்டவுன் விதிமுறைகள் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓராண்டுக்கு மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும் என்று விதிமுறைகளை கேரளா அரசு வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க கேரளாவில் லாக்வுடன் விதிமுறைகள் மறு உத்தரவு வரும் வரை ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த ஓராண்டு காலத்திற்கு மக்கள் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

இதன்படி அடுத்த ஓராண்டிற்கு கேரளாவில் மக்களை கூட்டி பெரிய கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. அரசு அனுமதி பெற்று மட்டுமே கூட்டம் நடத்த வேண்டும். அப்படி நடத்தும் சமூக கூட்டங்களில் 10 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதியில்லை. 10 பேரும் மாஸ்க் அணிய வேண்டும்.

தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 4150 பேர் பாதிப்பு.. சென்னையில் பாசிட்டிவான மாற்றம்தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 4150 பேர் பாதிப்பு.. சென்னையில் பாசிட்டிவான மாற்றம்

கூட்டத்திற்கு அனுமதி இல்லை

கூட்டத்திற்கு அனுமதி இல்லை

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் பயன்படுத்தி கைகளை கழுவ வேண்டும். அடுத்த ஓராண்டில் எந்த விதமான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், தர்ணா, ஊர்வலங்கள் உள்ளிட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை.

முககவசம் அவசியம்

முககவசம் அவசியம்

திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு பங்கேற்க அனுமதி இல்லை. 50 பேரும் முககவசம் அணிய வேண்டும்.திருமண நிகழ்ச்சியில் ஆறு அடி இடைவெளி அவசியம். திருமண ஏற்பாட்டாளர்கள் சானிடைசர் அனைவருக்கும் வழங்க வேணடும்.

கோவிட் மரணம் என்றால்

கோவிட் மரணம் என்றால்

இறுதிச் சடங்குகளில், ஒரு நேரத்தில் அதிகபட்ச பங்கேற்பாளர்கள் இருபது நபர்களைத் தாண்டக்கூடாது, அவர்கள் அனைவரும் முகம் கவசம் அணிந்து, சானிடிசரைப் பயன்படுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு இடையே ஆறு அடி சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கோவிட் மரணம் என்று சந்தேகிக்கப்பட்டால், இந்திய அரசும் மாநில அரசும் வழங்கிய நிலையான அறிவுறுத்தல்கள் பின்பற்றப்பட வேண்டும்.

 சமூக இடைவெளி

சமூக இடைவெளி

அடுத்த ஓராண்டிற்கு மக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில், பணியிடங்களில், பேருந்துகளில், வாகனங்களில் பயணிக்கும் போது மாஸ்க் அணிவது கட்டாயம். அடுத்த ஓராண்டிற்கு மக்கள் பொது இடங்களில் 6 அடி இடைவெளியைவிட்டு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். கூட்டம் கூடக்கூடாது.

6 அடி இடைவெளி

6 அடி இடைவெளி

வணிகம் செய்யும் இடங்களில் மக்களிடையே குறைந்தது 6 அடி இடைவெளி பின்பற்ற வேண்டும். கூட்டம் கூட கூடாது. வணிகம் செய்யுங்கள் இடங்களில் அதிக மக்கள் ஒரே இடத்தில் குவியக்கூடாது. கட்டிடத்தின் அளவை பொறுத்தே ஆட்களை அனுமதிக்க வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி வணிகம் செய்ய வேண்டும்.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

தற்போதைய நிலையில் கேரளாவில் கொரோனா தொற்றால் 5430 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3174 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். 2228 பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கேரளாவில் இன்று ஒரே நாளில் 225 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

English summary
Kerala government extends Covid regulations till July 2021: Masks, ban on social gatherings now for a year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X