திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனாவால் பொருளாதார பாதிப்பு.. கேரளாவில் பேருந்து கட்டணம் 25 சதவீதம் உயர்வு

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்பை ஈடுகட்ட பேருந்து கட்டணத்தில் 25 சதவீதம் அளவிற்கு கேரள அரசு உயர்த்தி உள்ளது.

கடந்த மார்ச் மாதத்தில் இருந்து மின்னல் வேகத்தில் பரவ தொடங்கிய கொரோனா தொற்று காரணமாக லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் தொழில்துறை முடங்கியது. பொது போக்குவரத்து சேவைகள் அடியோடு முடங்கியது. இவை இரண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கான பாதைகள் இதுவரை தெரியவில்லை.

Kerala government hikes bus fares by 25 percent

ஏனெனில் கொரோனா தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. இதனால் மத்திய மாநில அரசுகளுக்கு போதிய வருவாய் இல்லாமல் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன.

இதற்கிடையே கடந்த 20 நாட்களுகளுக்கு மேலாக பெட்ரோல் டீசல் விலை தொடந்து உயர்ந்து வருகிறது. , இதனால் பொருளாதார பாதிப்புகளை மீட்டெடுப்பதற்காக கேரளாவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கட்டணங்களை 25% உயர்த்தி அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து கேரள மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் ஏ.கே சுசீந்திரன் கூறுகையில். போக்குவரத்துத் துறை எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட நீதிபதிகள் அடங்கிய குழு , அளித்த பரிந்துரையின் பேரில் தற்போது பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அரசு பள்ளி உருவாக்கிய ஐஏஎஸ்.. கேரளாவில் கொரோனாவை விரட்டும் தமிழர்.. அசத்தும் திருவனந்தபுரம் கலெக்டர்அரசு பள்ளி உருவாக்கிய ஐஏஎஸ்.. கேரளாவில் கொரோனாவை விரட்டும் தமிழர்.. அசத்தும் திருவனந்தபுரம் கலெக்டர்

குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயாக இருக்கும். இனி பேருந்து கட்டணம் 5 கிலோமீட்டருக்கு பதிலாக முதல் 2.5 கிலோமீட்டருக்கு கணக்கிடப்படும்.

கல்வி நிறுவனங்கள் செயல்படாததால் மாணவர்களுக்கான சிறப்பு கட்டணங்களை மாற்ற வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறோம். எனவே அந்த கட்டணம் உயர்த்தப்படாது. அத்துடன் குறைந்தபட்ச கட்டணத்தை அதிகரிக்க வேண்டாம் என்று முடிவு செய்தோம். அதனால்தான் குறைந்தபட்ச தூரத்தை குறைத்திருக்கிறோம்" இவ்வாறு கூறினார்.

English summary
Kerala private bus charges increased for journeys over 2.5 kilometers, hikes bus fares by 25 percent
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X