திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. கேரளா ஆளுநரை பேசவிடாமல் முற்றுகையிட்ட வரலாற்று ஆய்வாளர்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளா ஆளுநரை பேசவிடாமல் வரலாற்று ஆய்வாளர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தின் 80ஆவது கூட்டத்தின் தொடக்க விழா நேற்று கண்ணனூர் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்தது. இந்த கூட்டத்தில் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்து கொண்டார்.

Kerala Governor faces protest against CAA in Kannur University

அப்போது அந்த கூட்டத்தில் ஆளுநர் பேசும் போது மௌலானா ஆசாத் குறித்து பேசினார். இதையடுத்து வரலாற்றாய்வாளர் இர்ஃபான் ஹபீப் அவரது இருக்கையை விட்டு எழுந்து சென்று ஆளுநர் பேச்சை தடுக்க முயன்றார்.

மகாத்மா காந்தி, மௌலானா ஆசாத் உள்ளிட்ட தலைவர்களை குறிப்பிடுவதற்கு பதில் காந்தியை படுகொலை செய்த நாதுராம் கோட்சே குறித்து பேசுமாறு ஹபீப் ஆவேசமாக தெரிவித்தார். அது போல் மேலும் சிலரும் ஆளுநரை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

அப்போது ஆளுநர் ஆரிப் கூறுகையில் போராடுவதற்கு உங்களுக்கு உரிமை இருக்கிறது. ஆனால் அதற்காக என் முன்னால் நீங்கள் கோஷமிட கூடாது. ஆரோக்கியமான விவாதத்தையும் ஆலோசனையையும் விட்டுவிட்டு இது போல் கோஷமிட்டால் வன்முறையை நீங்கள் தூண்டிவிடுவதாக அர்த்தம் என்றார்.

இதுகுறித்து ஆளுநர் செய்தியாளர்களிடம் கூறுகையில் ஹபீப் எழுப்பிய கருத்துக்கு நான் பதில் அளித்தேன். ஒரு ஆளுநராக அரசியலமைப்புக்குள்பட்டு நடந்து கொள்வது என்னுடைய கடமையாகும். ஆனால் அவர் எனது பேச்சை தடுக்க முயன்றார். சகிப்புத்தன்மையின்மையால் எனது பேச்சை தடுத்து நிறுத்துவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்றார்.

வேண்டாம் CAA, NRC.. சென்னை முகப்பேரில் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்பு வேண்டாம் CAA, NRC.. சென்னை முகப்பேரில் திமுக மகளிரணியினர் கோலம் போட்டு எதிர்ப்பு

English summary
Kerala Governor faces protest against CAA in Kannur University while inaugurating Indian History Congress.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X