திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிஏஏவுக்கு எதிராக எனக்கு தெரிவிக்காமலேயே வழக்கு- கேரளா அரசு மீது ஆளுநர் ஆரிப் முகமது கான் பாய்ச்சல்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தம்மிடம் தெரிவிக்காமல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவதா? என கேரளா அரசு மீது ஆளுநர் ஆரிப் முகமது கான் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக கேரளா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்திலும் கேரளா அரசு வழக்கு தொடர்ந்தது.

Kerala Governor slams state govt on challenging CAA in SC

சி.ஏ.ஏ.வுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த முதல் மாநிலம் கேரளா. ஆனால் இதற்கு கேரளா மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் ஆரிப் முகமது கான் கூறியதாவது: சி.ஏ.ஏ.வுக்கு எதிராக கேரளா அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டதில் எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் ஆளுநர் என்பதால் என்னிடம்தான் கேரளா அரசு முதலில் தெரிவித்திருக்க வேண்டும்.

புதுச்சேரி பாஜகவுக்கு.. மீண்டும் தலைவரானார் சாமிநாதன்!புதுச்சேரி பாஜகவுக்கு.. மீண்டும் தலைவரானார் சாமிநாதன்!

அரசியல் சாசனப்படி மாநிலத்தின் தலைமை பொறுப்பில் இருக்கும் ஆளுநர்நான். ஆனால் நானே பத்திரிகைகளைப் பார்த்துதான் கேரளா அரசு, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை தெரிந்து கொண்டேன்.

Recommended Video

    இந்தியா - ஆஸ்திரேலியா போட்டியின் போது NRC, CAA க்கு எதிராக போராட்டம்

    நான் ஒன்றும் ரப்பர் ஸ்டாம்ப் அல்ல என்பதை தெளிவுபடுத்துகிறேன். கேரளா அரசின் நடவடிக்கையானது ஆளுநருக்கு தரப்பட வேண்டிய மரியாதையை மீறிய செயல்.

    ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஒரு மாநில அரசால் எப்படி உச்சநீதிமன்றத்துக்கு போக முடியும் என்பதை நானும் பார்க்கிறேன்.. என்னுடைய ஒப்புதல் தேவை என்பது இல்லை. ஆனால் குறைந்தபட்சம் என்னிடம் தெரிவித்திருக்க வேண்டும். இவ்வாறு ஆரிப் முகமது கான் தெரிவித்துள்ளார்.

    English summary
    Kerala Governor Arif Mohammad Khan said that I have no issue with State Govt going to the suprme court against CAA. But they should have informed me first..
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X