திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கேரளாவில் அதிர்ச்சி.. போலீசாரின் 25000 ஓட்டுக்களை கள்ளத்தனமாக ஆளும் கட்சியே போட்டுக்கொண்டது அம்பலம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    போலீசாரின் ஓட்டுக்களை கள்ளத்தனமாக ஆளும் கட்சியே போட்டுக்கொண்டது அம்பலம்!

    திருவனந்தபுரம்: கேரளாவில் போலீசாரின் 25000 தபால் ஓட்டுக்களை ஆளும் கட்சியினரே தங்களின் வேட்பாளர்களுக்கு கள்ளத்தனமாக போட்டுக்கொண்டது அம்பலமாகியுள்ளது.

    கேரளாவில் உள்ள 20 பாராளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடை பெற்றது. இந்த தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணிக்கும், எதிர்க் கட்சியான காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவியது.

    தேர்தலின்போது கேரளாவில் உள்ள பல வாக்குச் சாவடிகளில் கள்ள ஓட்டுகள் பதிவானதாகவும், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் இதில் ஈடுபட்டதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டு கூறப்பட்டது.

    வீடியோ காட்சிகள்

    வீடியோ காட்சிகள்

    வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவின் போது வெப் கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்ட சில வீடியோ காட்சிகளும் வெளியானது. அதில் பெண்கள் உட்பட பலர் கள்ள ஓட்டு போட்டது தெரியவந்தது.

    தபால் ஓட்டில் மோசடி

    தபால் ஓட்டில் மோசடி

    இந்த நிலையில் 25 ஆயிரம் கேரள போலீசாரின் தபால் ஓட்டுகள் கள்ளத்தனமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பான புகார் கேரள போலீஸ் டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா கவனத்திற்கு சென்றது.

    உண்மைதான்

    உண்மைதான்

    இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட விசாரணை அறிக்கையில் கேரள போலீசாரின் தபால் ஓட்டுக்களை மொத்தமாக வாங்கி அதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆதரவு போலீஸ் சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கு அனுப்பி வைத்ததும் அந்த தபால் ஓட்டுகள் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு போடப்பட்டதும் உண்மைதான் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    தேர்தல் அதிகாரி

    தேர்தல் அதிகாரி

    இந்த அறிக்கை டி.ஜி.பி. லோக்நாத் பெக்ரா மூலம் கேரள தலைமை தேர்தல் அதிகாரி டிக்காராம் மீனாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. ஆளும் கட்சியினரே போலீசாரின் தபால் ஓட்டுக்களை கள்ளத்தனமாக போட்டுக்கொண்ட சம்பவம் கேரளா மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Kerala govt did fraudulent in Police postal votes. 25000 postal votes of police gone to ruling party candidates.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X