திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எல்லா இறப்பையும் கொரோனா மரணங்களாக ஏற்க முடியாது... கேரள சுகாதார அமைச்சர் அதிரடி விளக்கம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கோவிட் -19 இறப்புகளை அரசு மூடிமறைக்கிறது என்ற குற்றச்சாட்டை கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜா திட்டவட்டமாக நிராகரித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் என்று கண்டறியப்பட்டு, அதன்பின்னர் இறந்து போன அனைவரையும், கொரானாவால் தான் இறந்தவர்கள் என அதிகாரப்பூர்வமான எண்ணிக்கையில் சேர்க்க முடியாது என்பதையும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.

இது தொடர்பாக கேரள சுகாதார அமைச்சர் கே.கே.ஷைலாஜா கூறுகையில், "உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவித்த கொரோனாவால் இறந்தார்கள் என்பதற்கான சான்றுகள் மற்றும் வகைப்படுத்தலுக்கான சர்வதேச குறியீட்டு முறையின் படிதான் கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்படும் மரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா.. அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் சேர்ப்புமத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு கொரோனா.. அமித்ஷா அனுமதிக்கப்பட்டுள்ள ஆஸ்பத்திரியில் சேர்ப்பு

புதிய வழிகாட்டுதல்கள்

புதிய வழிகாட்டுதல்கள்

நோய்களின் சர்வதேச புள்ளிவிவர வகைப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த வழிகாட்டுதல்கள் நிறுவப்பட்டுள்ளன. ஒரு நோயாளி உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டதன் விளைவாக, மோசமான நிலையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகும் அதுவும் ஒரு காரணமாக மட்டுமே இருக்க முடியும். எனவே கொரோனா மரணங்கள் விஷயத்தில் சுகாதாரத் துறையின் நிபுணர் குழுதான் இறுதி முடிவை எடுக்கிறது.

விபத்தல் இறந்தால்

விபத்தல் இறந்தால்

ஒரு கோவிட்-பாசிட்டிவ் நோயாளி தற்கொலை செய்து , நீரில் மூழ்கி அல்லது விபத்தால் இறந்தால், அதை கோவிட்-மரணமாக கருத முடியாது. ஒரு நோயாளி, தொற்றுநோய்களின் சந்தேகத்தின் கீழ், இறந்தாலும் கூட, மருத்துவர்கள் குழு ஒரு விரிவான பரிசோதனையை மேற்கொண்டு அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தான் இறந்தாரா என்பதை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்.

கே.கே.சைலஜா விளக்கம்

கே.கே.சைலஜா விளக்கம்

இதேபோல், கடுமையான பல்வேறு நோய் பாதிப்பின் விளைவாக இறக்கும் ஒரு நபர் மரணத்திற்குப் பின் கொரோனா பாசிட்டிவ் என்று சோதனையில் தெரிய வந்தாலும் அதை ஒரு கோவிட்-மரணம் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அதை பற்றி வெடுப்பதற்கு முன்னர் நோயாளியின் மரணம் குறித்து மருத்துவமனை தாக்கல் செய்த அறிக்கையை நிபுணர் மருத்துவ குழு மதிப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு கோவிட் மரணங்கள் என்று அழைக்கப்படும் கேஸ்களின் உதாரணங்களை அமைச்சர் கே.கே.சைலஜா மேற்கோள் காட்டினார்.

இறந்த பின்னர் கொரோனா

இறந்த பின்னர் கொரோனா

அண்மையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்ட 23 வயது இளைஞரின் மரணம், மாநிலத்தின் கொரோனா மரண எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. இதேபோல் கடுமையான பல்வேறு நோய் பாதிப்பால் ஜூலை 31 அன்று திருவனந்தபுரத்தில் இறந்த 68 வயதான கோவிட்-நேர்மறை நோயாளியும் சேர்க்கப்படவில்லை. நிபுணர் குழுவின் சோதனைக்குப் பிறகே இருவரின் மரணமும் அதிகாரப்பூர்வ கொரோனா மரண எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டது.

ஏன் சேர்ப்பு இல்லை

ஏன் சேர்ப்பு இல்லை

இதனிடையே "அதிகாரப்பூர்வ எண்ணிக்கையின் கீழ் சேர்க்கப்படவில்லை என ஊடகத்தில் சுட்டிக்காட்டப்பட்டட சில கொரோனா மரணங்கள் அடுத்த இரண்டு நாட்களில் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டுள்ளன. வழிகாட்டுதல்களுக்கு பொருந்தாத மற்றவையும் தவிர்க்கப்பட்டுள்ளன, " என்று அமைச்சர் கே.கே.சைலஜா விளக்கம் அளித்தார்.

மூடி மறைப்பதாக புகார்

மூடி மறைப்பதாக புகார்

மரணத்திற்குப் பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கேராளவில் அதிக அளவில் இருக்கிறது. ஆனால் அப்படி இறந்த பல இறப்புகளை கேரளா தாமதமாகவே கொரோனா மரணம் என அறிவித்து வந்தது. பல மரணங்களை சேர்க்காமல் விட்டது. அரசின் இந்த முடிவிற்கு பல எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆட்சேபனை தெரிவித்து வருகிறார்கள். கேரளா கொரோனா இறப்பை மூடி மறைப்பதாக குற்றச்சாட்டு நிலவுகிறது.

English summary
Kerala Health Minister KK Shailaja Tuesday dismissed charges that the state is covering up Covid-19 deaths. she said not all deaths detected as Covid-positive in the preliminary examination can be recorded as part of the official tally.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X