திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போய் குரான் படிங்க முதல்ல.. இதென்ன அலங்கோலம்.. குழந்தையை வச்சுக்கிட்டு.. ரெஹனாவுக்கு நீதிபதி கண்டனம்

ரெஹானே பாத்திமா முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: "அரை நிர்வாண கோலத்தில் படுத்து கொண்டு, குழந்தைகளை விட்டு படம் வரைய வைப்பதா? இது எல்லாம், 4 சுவற்றுக்குள்ளே, அவர் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கணும்.. மனுஸ்மிருதி, புனித குர்ஆன் இப்படி நூல்களை படிக்க பார்க்க சொல்லுங்க.. அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கமா சொல்லப்பட்டிருக்கும்" என்று ஹைகோர்ட் ஜட்ஜ் கொந்தளித்துவிட்டார்.. மேலும், ரெஹனா பாத்திமா மீதான முன்ஜாமீன் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Recommended Video

    அரை நிர்வாண உடலில் குழந்தைகளை ஓவியம் வரைய வைத்த Rehana Fathima

    பாத்திமா ரெஹானா.. சமூக செயற்பாட்டாளர்.. ஆனால், சர்ச்சைகளுக்கு மத்தியில் வாழ்பவர்.. சபரிமலை குறித்த பேச்சில் இந்து அமைப்புகள் பாத்திமா மீது தாக்குதல் நடத்தின.. பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த இவரை அங்கிருந்து நீக்கியும் விட்டனர்.

    இதையடுத்து இன்னொரு பிரச்சனையில் சிக்கினார்.. அதன்படி, ஜுன் 19தேதி, ஒரு வீடியோ இவர் யூ-டியூப்பில் ஷேர் செய்தார்.. அதில் அரை நிர்வாண கோலத்தில் படுத்துள்ளார்.. அந்த உடலில் அவருடைய மகனும், மகளும் டிராயிங் வரைகிறார்கள்.. அதற்கு 'பாடி ஆர்ட் பாலிடிக்ஸ்' (#BodyArtPolitics) என்று ஒரு தலைப்பும் போட்டிருந்தார். பாத்திமா அரை நிர்வாணத்தில் இருக்க, சிறு குழந்தைகள் ஓவியம் வரைந்திருந்தனர்.

    100 ரூபாய் பைன்.. சீட் பெல்ட் அணியாமல் சென்ற ரஜினிகாந்த்.. அபராதம் விதித்த போலீஸ்.. வெளியான ரசீது!100 ரூபாய் பைன்.. சீட் பெல்ட் அணியாமல் சென்ற ரஜினிகாந்த்.. அபராதம் விதித்த போலீஸ்.. வெளியான ரசீது!

    குழந்தைகள்

    குழந்தைகள்

    மேலும் "தன் அம்மாவின் உடலை பார்த்து வளரும் குழந்தைகள் பெண்களின் உடலை அவமதிக்காது... பெண்களின் உடலைப் பற்றிய விழிப்புணர்வை வீட்டிலிருந்தே கற்றுக் கொடுத்தால்தான் இந்த சமூகம் மாறும்.. பாலியல், நிர்வாணம் தடைசெய்யப்பட்ட ஒரு சமூகத்தில் பெண்கள் பாலியல் மற்றும் அவர்களின் உடல்களைப் பற்றி வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை திரும்பவும் வலியுறுத்துவதற்காகவே இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.

     ஆபாசம்

    ஆபாசம்

    ஆண்களின் உடலுடன் ஒப்பிடும்போது, பெண்களின் உடலும் அவளது நிர்வாணமும் 55 கிலோவுக்கு மேல் சதை.. கால்கள் இருப்பதை கண்டு லெகிங்ஸ் தூண்டப்படுகிறது. அதே நேரத்தில் ஆண் நின்றால் ஆபாசம் கிடையாது.. இது தற்போது சமூகத்திற்கு வழங்கப்பட்டு வரும் தவறான பாலியல் உணர்வுதான்... அழகு பார்ப்பவரின் கண்ணில் உள்ளது.. அது போலவே, பார்ப்பவரின் பார்வையில் ஆபாசமும் உள்ளது" என்று இதற்கு நீண்ட விளக்கமும் தந்திருந்தார்.

     நிர்வாண உடல்

    நிர்வாண உடல்

    இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் வைரலானது.. கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது.. குழந்தைகளை பக்கத்திலேயே வைத்து கொண்டு, அரை நிர்வாண உடலில் எப்படி ஓவியம் வரையலாம்? இது குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் என்று பல்வேறு அமைப்புகள் கண்டனங்களை எழுப்பின.. போக்ஸோவில் ரெஹனாவை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வெடித்தது.

    புகார்

    புகார்

    இதையடுத்து, பத்தனம்திட்டா மாவட்ட பாஜக தலைவர் சார்பில் திருவல்லா போலீசில் புகார் தரப்பட்டது.. தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் திருவல்லா போலீசும் வழக்குப்பதிவு செய்தது.. இதெல்லாம் தவிர, இந்த விவகாரத்தை மாநில குழந்தைகள் நல உரிமை ஆணையமும் கையில் எடுத்து, வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது.

    விசாரணை

    விசாரணை

    இந்த சமயத்தில், இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ரெஹானா பாத்திமா கேரள ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.. அந்த மனு நீதிபதி பிவி உன்னிகிருஷ்ணன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது... அப்போது பாத்திமா தரப்பில் வாதாடிய வக்கீல், "மனுதாரர் தன்னுடைய குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை கற்று கொடுக்கத்தான் இப்படி செய்தார்" என்று வாதாடினார்.

    சித்தாந்தம்

    சித்தாந்தம்

    இதைக் கேட்ட நீதிபதி உன்னிகிருஷ்ணன் கடுமையான ஆவேசமடைந்தார்.. "மனுதாரர் ரெஹானா பாத்திமாவுக்கு வேண்டுமானால் அவரது கொள்கையின்படி.. சித்தாந்தப்படி.. அவரின் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க உரிமை இருக்கு.. ஆனால், அவை எல்லாத்தையும் 4 சுவற்றுக்குள்ளே அவர் வீட்டுக்குள்ளேயே இருந்திருக்கணும்.. சட்டத்தால் அதைத் தடை செய்ய முயலக்கூடாது.. மனுஸ்மிருதி, புனித குர்ஆன் இப்படி நூல்களை படிக்க பார்க்க சொல்லுங்க.. அதில் குழந்தைகளின் வாழ்வில் தாயின் பங்கு என்ன என்பது பற்றி விளக்கமா சொல்லப்பட்டிருக்கும்.

    தள்ளுபடி

    தள்ளுபடி

    தன்னுடைய குழந்தைகளுக்கு பாலியல் கல்வி கற்றுத்தர வேண்டும் என மனுதாரர் நினைத்திருக்கிறார்.. அந்த நோக்கத்துக்காக அவரின் அரை நிர்வாண உடலில் அவரின் குழந்தைகளை வைத்தே ஓவியம் வரையவைத்து, அதை சமூக ஊடங்களில் பதிவேற்றமும் செய்துள்ளார்... மனுதாரர் தன்னுடைய குழந்தைகளுக்கு பாலியல் கல்வியை சொல்லி கொடுக்க வேண்டும் என்ற வாதங்களையும், விளக்கத்தையும் கேட்கும் நிலையில் இல்லை" என்று கூறி அந்த மனுவை தள்ளுபடி செய்தார்.

    English summary
    kerala high court rejects anticipatory bail of rehana fathima
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X