திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பயங்கர பரபரப்பு.. பாஜகவை ஓரங்கட்டிய இடதுசாரிகள்.. டாப் கியர் போட்டு மேலே வரும் பினராயி அரசு..!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: இன்று நடக்கும் கேரள உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் பினராயி அரசுக்கே மறுபடியும் சாதககும் சூழல் ஏற்பட்டு வருகிறது.. ஆம்.. உள்ளாட்சி தேர்தல் ரிசல்ட் மெல்ல மெல்ல வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், பிரம்மாண்டமான வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கிது இடது முன்னணி கூட்டணி!

இன்று உள்ளாட்சி தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.. உள்ளது.. கடந்த 8-ம் தேதி 14 மாவட்டங்களின் 3 கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தன. இடது முன்னணி - காங்கிரஸ் - பாஜக என மும்முனை போட்டி அங்கு ஏற்பட்டது.

3-ம் கட்ட வாக்குப்பதிவின்போது, தன்னுடைய ஓட்டை செலுத்திவிட்டு பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் பேசினார்.. அப்போது, "மத்திய விசாரணை அமைப்புகளை வைத்து இடது முன்னணியை பலவீனப்படுத்த முயற்சித்தனர். ஆனால் அந்த திட்டம் பலிக்காது என்பது 16ம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கையின் போது அனைவருக்கும் தெரியும்" என்று உறுதிபட தெரிவித்திருந்தார்.

கேரள உள்ளாட்சி தேர்தல்: இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!கேரள உள்ளாட்சி தேர்தல்: இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்..!

 எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

இதுதான் இன்றைய எதிர்பார்ப்பாக உருவெடுத்தது.. இதற்கு காரணம், பினராயி அரசு தன் வெற்றியை தக்க வைக்குமா என்ற சந்தேகம்தான். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த சமயத்தில் கேரளாவை புகழாத மாநிலமே இல்லை.. ஒவ்வொரு செயலிலும் முன்மாதிரியாக நடந்து இந்தியாவுக்கே வழிகாட்டியது கேரளா. ஆனால், இந்த ஒரு வருட இடைவெளியில் ஏகப்பட்ட பிரச்சனை, சர்ச்சைகளில் சிக்கி கொண்டது யாரும் எதிர்பாராத ஒன்றாகும்.

சுரேந்திரன்

சுரேந்திரன்

கேரளா வெள்ளத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வரும் போது, எதிர்பாராத வகைகளில் பினராயி அரசுக்கு சிக்கல் ஏற்பட்டதை மறுக்க முடியாது.. இதற்கு பெரும்பாலான காரணம் சாட்சாத் பினராயி என்பதையும் மறுக்க முடியாது. கேரள மாநில பாஜகவுக்கு புதிய தலைவராக சுரேந்திரன் நியமிக்கப்பட்டு 24 மணி நேரம் மட்டுமே ஆன நிலையில், பினராயி விஜயன் மீது ஊழல் குற்றச்சாட்டை முன்வைத்து பரபரக்க வைத்தார்.

 போலீஸ் சட்ட மசோதா

போலீஸ் சட்ட மசோதா

பிறகு, கேரள மாநில அரசு போலீஸ் சட்ட திருத்த மசோதாவை பினராயி விஜயன் கொண்டு வந்து கவர்னரின் ஒப்புதலையும் பெற்றபோதே அதிருப்திகள் எழ தொடங்கின.. அந்த மசோதாவின் மூலம் சோஷியல் மீடியாவில் தவறான தகவல்களை பரப்புபவர்கள் மீது போலீஸ், தாமாக முன்வந்து புகார் வழக்கு பதிவு செய்ய முடியும். ஜாமீனில் வெளியே வர முடியாத பிரிவுகளில் கைது செய்து சிறையில் அடைக்க, இந்தச் சட்டத் திருத்த மசோதா வழிவகை செய்கிறது.

 மிரட்டல்

மிரட்டல்

இதற்குதான் எதிர்க்கட்சிகள் கொந்தளித்தன.. "பினராயி அரசை விமர்சித்தால் ஜெயிலில் அடைப்போம்" என்ற மிரட்டல்தான் இந்தப் புதிய சட்ட மசோதா" என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து, பூதாகரமாக கிளம்பியது தங்க கடத்தல் ஸ்வப்னா விவகாரம்.. முதல்வரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தகவல் தொடர்புத் துறையில் பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷ், இதில் பலமாக சிக்கியுள்ளதால் இந்த விவகாரம் கேரள மாநிலத்தில் புயலை கிளப்பியது.. எதிர்க்கட்சிகள் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைக்கும் அளவுக்கு சென்றதையும் நினைவுகூர வேண்டி உள்ளது.

 தடுப்பூசி இலவசம்

தடுப்பூசி இலவசம்

3 நாளைக்கு முன்புகூட, கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வந்தபின், கேரள மக்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படும்.. இதற்காக அரசு மக்களிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்காது" என்று வாயை கொடுத்து மாட்டி கொண்டார் பினராயி.. 3வது கட்ட தேர்தல் முடியாத நிலையில், எதுக்காக தடுப்பூசி குறித்த அறிவிப்புகளை வெளியிட வேண்டும்? என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.. இதற்கு என விளக்கம் கேட்டு பினராயி விஜயனுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பினராயி

பினராயி

இப்படி ஒவ்வொரு சிக்கலாக பினராயி சிக்கிய சூழலில்தான் இந்த உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த குற்றச்சாட்டுகளைதான் லிஸ்ட் போட்டு பிரச்சாரங்களில் சொல்லி வந்தது.. அதுமட்டுமல்ல, அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவோம், எல்லா இடங்களிலும் பாஜக கொடிதான் பறக்கும் என்று பிரச்சாரத்தின்போது, அக்கட்சி நம்பிக்கை அதீத தெரிவித்திருந்த நிலையில், அனைத்தையும் தவிடுபொடியாக்கிவிட்டது இடது முன்னணி கூட்டணி.

3வது இடம்

3வது இடம்

இதுவரை வந்த ஓட்டு எண்ணிக்கையில், மாநில அரசுக்கு சாதமான சூழலே கிடைத்து வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, 941 பஞ்சாயத்துகளில் 442 இடங்களில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (எல்.டி.எஃப்) முன்னிலை வகிக்கிறது. அடுத்தபடியாக, 344 பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி (யு.டி.எஃப்) மற்றும் 33 பஞ்சாயத்துகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. அதாவது தற்சமயம், 3வது இடத்தில் பாஜக உள்ளது!

English summary
Kerala Local Body Election Result: Will the Pinarayi Gov win a majority
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X