திருவனந்தபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இது செம.. உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல.. அடுத்த ஆட்சியும் கேரளாவில் இடதுசாரிகள்தான்!

வரும் சட்டமன்ற தேர்தலிலும் இடதுசாரிகளே ஆட்சியை பிடிப்பார்கள் என்று தெரிகிறது

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் செங்கொடியை கீழே இறக்குவது அத்தனை சீக்கிரம் நடக்காத ஒன்றாகவே தெரிகிறது. உள்ளாட்சித் தேர்தலில் வாங்கிய வாக்குகளை வச்சு பார்த்தால் இடதுசாரிகளே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார்கள் என்பது உறுதியாக தெரிகிறது.

பாஜக தனது காவி கொடியை நாடு முழுவதும் பறக்க விட படு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக குறி வைத்து ஒவ்வொரு மாநிலமாக உத்திகளை களம் இறக்கி பதம் பார்த்து வருகிறது.

அந்த வகையில் கேரளாவுக்கும் அது தனி திட்டத்தை வைத்துள்ளது. அதன் முதல் கட்டமாக உள்ளாட்சி தேர்தலை குறி வைத்து பல வேலைகளைப் பார்த்தது.

 இடதுசாரிகள்

இடதுசாரிகள்

ஆனால் தனது முந்தையை நிலையை ஓரளவுக்கு பலப்படுத்திக் கொள்ள முடிந்ததே தவிர, இடதுசாரிகளை ஆட்டம் காண வைக்க முடியாமல் போய் விட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு கேரளா சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ளது... அதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலே தெளிவுபடுத்தி விட்டது.

 இடதுசாரிகள்

இடதுசாரிகள்

ஆனால் தனது முந்தையை நிலையை ஓரளவுக்கு பலப்படுத்திக் கொள்ள முடிந்ததே தவிர, இடதுசாரிகளை ஆட்டம் காண வைக்க முடியாமல் போய் விட்டது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு கேரளா சட்டசபைக்கு தேர்தல் வரவுள்ளது... அதில் யாருக்கு வெற்றி கிடைக்கும் என்பதை நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலே தெளிவுபடுத்தி விட்டது.

 பாஜக

பாஜக

அதாவது தற்போது விழுந்துள்ள வாக்குகளை கூட்டி பார்த்தால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 101 இடங்களில் வெல்லும் என்று தெரிய வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணிக்கு 38 இடங்களே கிடைக்கும் என்று தெரிகிறது.

 தொகுதிகள்

தொகுதிகள்

பாஜகவுக்கு கடந்த 2016 தேர்தலில் கிடைத்தது போல ஒரே ஒரு தொகுதியே (நேமம்) இந்த முறையும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் காசர்கோடு, காழகோட்டம், மஞ்சேஸ்வரம், வட்டியூர்க்காவு, திருவனந்தபுரம் ஆகிய தொகுதிகளில் பாஜக 2வது இடத்தை பிடிக்கும்.

கூட்டணி

கூட்டணி

பாஜக பதம் பார்த்த வாக்குகள் எல்லாமே காங்கிரஸ் கட்சியின் வாக்குகள்தான். அதனால் இதில் காங்கிரஸ்தான் கவலைக்குரியதாக இருக்கிறது. இன்னொரு பக்கம், கடந்த 2016 சட்டசபை தேர்தலில் இடதுசாரி கூட்டணிக்கு 91 இடங்கள் கிடைத்தன. ஆனால் 2019 லோக்சபா தேர்தலில் அது வாங்கிய வாக்குகளை வைத்து பார்த்தபோது 16 சட்டசபை தொகுதிகளே கிடைக்கும் என்ற நிலை இருந்தது.

 வாக்கு சதவீதம்

வாக்கு சதவீதம்

லோக்சபா தேர்தலில் மொத்தம் உள்ள 20 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே இடதுசாரி கூட்டணி வென்றிருந்தது. ஆனால் உள்ளாட்சி தேர்தலில் இடதுசாரி கூட்டணி 41 முதல் 42 சதவீதம் வாக்குகளை அள்ளியுள்ளது.. காங்கிரஸ் கூட்டணியின் வாக்கு சதவீதம் 37 சதவீதமாகும்.. தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 15 சதவீதம் மட்டுமே.

 நம்பிக்கை

நம்பிக்கை

மத்திய கேரளாவில்தான் இடதுசாரிகள் அசத்தியுள்ளனர். அங்கு கேரளா காங்கிரஸ் (எம்) உடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது பலன் கொடுத்துள்ளது.. கிறிஸ்தவர்களின் வாக்குகளும் இடதுசாரிக்கு வலுவாக கிடைத்துள்ளது... இப்போது கிடைத்துள்ள இந்த வாக்குகளை சட்டசபைத் தேர்தலிலும் பெறுவோம் என்று இடதுசாரிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.

English summary
Kerala Local body election results boosting LDF ahead of assembly election 2021
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X